தினமும் தூக்க மாத்திரை கொடுத்து 13 வயது சிறுமியை விபசாரத்தில் தள்ளிய 'கொடூர தாய்'
17 Jun,2023
.கல் மனம் படைத்த தாய் தனது மகளை பணத்திற்காக விபசாரத்தில் ஈடுபடுத்த திட்டமிட்டார். பாட்டியிடம் தனக்கு நேர்ந்த கொடுமைகளை சிறுமி கண்ணீர் மல்க கூறியுள்ளார். மதுரை: Powered By மதுரை சம்பக்குளத்தை சேர்ந்த 13 வயது சிறுமியின் தந்தை சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். அவரது தாய் அந்த சிறுமியை வளர்க்க முன்வரவில்லை.
இதனால் செல்லூரில் உள்ள தந்தை வழி பாட்டி பராமரிப்பில் சிறுமி வளர்ந்து வந்தார். அந்த சிறுமி அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்த நிலையில், கோடை விடுமுறையை முன்னிட்டு அங்கு வந்த அவரது தாய் தனது மகளை சம்பக்குளத்தில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்துச்சென்றுள்ளார். அப்போது கல் மனம் படைத்த தாய் தனது மகளை பணத்திற்காக விபசாரத்தில் ஈடுபடுத்த திட்டமிட்டார். இதற்காக தினந்தோறும் இரவு சிறுமிக்கு தெரியாமல் அவருக்கு தூக்க மாத்திரைகள் கொடுக்கப்பட்டதாக தெரிகிறது. அதன்பின் சில காமுகர்கள் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
.