கடற்கரையில் உடலுறவு கொள்ளும் காதல் ஜோடிகள்... கறார் உத்தரவு பிறப்பித்த நெதர்லாந்து..!
16 Jun,2023
ஐரோப்பிய நாடான நெதர்லாந்தில் வீரே என்ற கடற்கரை நகரம் உள்ளது. இங்கு உள்ள புகழ்பெற்ற கடற்கரைக்கு பலரும் ஆர்வத்துடன் வருவது வழக்கம். குறிப்பாக, சூரிய குளியல் எனப்படும் சன்பாத் எடுக்கவும், குடும்பத்தார் தங்கள் குழந்தைகளுடன் பொழுதை கழிக்கவும் வருகின்றனர். இத்துடன் பல இளம் ஜோடிகளும் அங்கு வரும் நிலையில், சில ஜோடிகளின் செயல்பாடு காரணமாக அங்கு புதிய கட்டுப்பாடு விதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
பல ஜோடிகள் இந்த கடற்கரை பகுதியை உடலுறவு கொள்ளும் ஸ்பாட்டாக மாற்றி அத்துமீறலில் ஈடுபட்டுவந்துள்ளனர். குறிப்பாக கடற்கரையை ஒட்டியுள்ள குன்று பகுதிகளில் இது போன்ற சம்பவங்கள் அதிகம் நிகழ்ந்துள்ளது. இந்த விவகரங்கள் அங்கு வரும் மற்ற நபர்களை அருவருக்க செய்துள்ளது. குழந்தைகளுடன் பொழுதை கழிக்க வரும் குடும்பத்தார்கள் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த நிலையில், அங்குள்ள நகராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளனர்.
இது அரசு நிர்வாகத்தின் கவனத்திற்கு சென்ற நிலையில், அவர்கள் கடற்கடை பகுதிகளில் எச்சரிக்கை வாசகங்கள் கொண்ட பதாகைகளை வைத்து முதலில் நடவடிக்கை எடுத்தனர். ஆனால், வாய்மொழி எச்சரிக்கைகளை பொருட்படுத்தாமல் ஜோடிகள் அத்துமீறி உடலுறவு கொள்ளும் சம்பவங்கள் தொடர்ந்துள்ளது.
எனவே, வேறு வழியின்றி ஜோடிகளுக்கு நிர்வாகம் கறாரான தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. கடற்கரை பகுதிகளில் இனி தொடர்ச்சியாக கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அத்துமீறி உடலுறவில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது. அதேவேளை அரை நிர்வாணமாக சன் பாத் எடுப்பதற்கு எந்த தடையும் இல்லை என கூறியுள்ளது.
வீரே நகர மேயரான ஃபிடெரிக் ஷோவெனார் கூறுகையில், இந்த கடற்கரையும், குன்றுகளும் உள்ளூர் சமூகத்திற்கு முக்கியமான ஒன்று. அதை பாதுகாக்க வேண்டியது அவசியம். விடுமுறைக்கு பொழுதை கழிக்க வருவோர் விரும்பத்தகாத செயல்களில் ஈடுபடுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றுள்ளார். கடற்கரையில் உடலுறவை தடுக்கும் இந்த திட்டத்திற்கு Project Orange Sun என பெயர் வைக்கப்பட்டுள்ளது.