கிட்னி கேன்சர் என்னும் சிறுநீரக புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு போதுமான அளவு உள்ளதா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். கிட்னி கேன்ஸர் பற்றி நாம் தெரிந்து கொள்ளவேண்டிய விஷயங்கள் என்ன என்பதை பார்க்கலாம்.
சிறுநீரகங்கள் இரண்டு பீன் வடிவ உறுப்புகள், இவை வயிற்று உறுப்புகளுக்கு பின்னால் அமைந்துள்ளன. உங்கள் முதுகெலும்பின் ஒவ்வொரு பக்கத்திலும் ஒரு சிறுநீரகம் உள்ளது. சிறுநீரக குழாய் தொற்று குறித்து இருக்கும் விழிப்புணர்வு, அதிகரித்து வரும் சிறுநீரக புற்றுநோய் பற்றி இல்லை என்று தான் சொல்ல வேண்டும். சிறுநீரக புற்றுநோய் குறித்து சிறுநீரக சிகிச்சை
சிறுநீரக புற்றுநோய் Kidney cancer என்றால் என்ன?
சிறுநீரகம் இரத்தத்தில் இருந்து கழிவுகள் மற்றும் கூடுதல் திரவத்தை அகற்றி, அதை சிறுநீராக வெளியேற்றுகின்றன. சிறுநீரக திசுக்களில் உள்ள உயிரணுக்களின் அசாதாரண வளர்ச்சி இது. காலப்போக்கில் இந்த செல்கள் கட்டியை உருவாக்குகின்றன. உயிரணுக்களில் ஏதாவது மாற்றத்தை தூண்டும் போது புற்றுநோய் உருவாகிறது.
இந்த வீரியம் மிக்க கட்டி மற்ற திசுக்கள் மற்றும் முக்கிய உறுப்புகளுக்கு பரவுகிறது. இது நிகழும் போது, இது மெட்டாஸ்டாஸிஸ் என்று அழைக்கப்படுகிறது.
கிட்னி கேன்சர் அறிகுறிகள் எப்படி இருக்கும்?
சிறுநீரக புற்றுநோய் ஆரம்ப கட்டங்களில் குறிப்பிடத்தக்க எந்த அறிகுறிகளையும் உருவாக்காது. ஆனால் கட்டி வளரும் போது அறிகுறிகள் தோன்ற ஆரம்பிக்கலாம்.
சிறுநீரில் இரத்தம் வருவது சிறுநீரக புற்றுநோயின் அறிகுறிகளில் ஒன்று. ஆனால் சிறுநீரில் இரத்தம் வந்தாலே அது சிறுநீரக புற்றுநோய்தான் என்று சொல்லிவிட முடியாது. சிறுநீரில் இரத்தம் வருவதற்கு பல காரணங்கள் உண்டு. மருத்துவரை அணுகினால் அவரே சரியான காரணத்தை கண்டறிந்துவிட முடியும். ஆனால் கை வைத்தியம் செய்கிறேன் என்று பலர் தாமதமாக்கும் போது அது கிட்னி கேன்சராக இருக்கும் நிலையில் அவை பாதிப்பை முன்னோக்கி கொண்டு செல்லலாம்.
ஒரு சிறுநீரகத்தில் கேன்சர் கட்டி வந்தாலும் பாதிப்பு வருமா?
இரண்டு சிறுநீரகங்கள் இருந்தாலும் ஒரு சிறுநீரகத்தில் கேன்சர் கட்டி வந்தாலும் சிறுநீரில் இரத்தம் வரலாம். இரண்டு சிறுநீரகங்களின் இணைப்பும் ஒரு குழாயில் தான் இணைந்துள்ளது. அதனால் ஒரு சிறுநீரில் கேன்சர் கட்டி இருந்தாலும் கூடசிறுநீரில் இரத்தம் வரலாம். கிட்னி கேன்சர் என்பது ஆரம்பத்தில் பெரும்பாலும் சிறுநீரகப்பையில் தான் வரும்.
கிட்னி கேன்சரை அறிகுறிகள் இல்லாமல் கண்டறிய முடியாதா?
இப்போது பொதுவான உடல் பரிசோதனை செய்யும் போது வயிற்றுப்பகுதி ஸ்கேன் எடுப்பது வழக்கம். பித்தப்பை கல் , சிறுநீரக கல் போன்றவையும் கவனிப்பது உண்டு. அப்போதே சிறுநீரகத்தில் கட்டி இருந்தாலும் கண்டறியப்பட்டுவிடுகிறது. அதனால் ஆரம்ப கட்டத்திலேயே இது கண்டறியப்பட்டு விடுகிறது.
கிட்னி கேன்சர் வருவதற்கு என்ன காரணம்?
குடும்ப வரலாறு (இவர்கள் அடிக்கடி உடல் பரிசோதனை செய்து கொள்வது அவசியம்)
மரபணு காரணம் (இந்நிலையில் இரண்டு சிறுநீரகங்களிலும் புற்றுநோய் வர வய்ப்புண்டு
கிட்னி கேன்சர் பாதிப்பு யாருக்கு அதிகம்?
பெண்களுடன் ஒப்பிடும் போது ஆண்களுக்குதான் அதிகமாக வருகிறது. அதனால் பெண்களுக்கு வராது என்று சொல்லிவிட முடியாது. பெண்களுக்கும் வரலாம்.
நீரிழிவு நோயாளிகளுக்கு சிறுநீரகம் செயலிழப்பு உண்டாக அதிக வாய்ப்புண்டு ஆனால் சிறுநீரக புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு குறைவு தான்.
கிட்னி கேன்சர் தடுக்க என்ன செய்யலாம்?
கிட்னி கேன்சரை ஆரம்ப கட்டத்தில் கண்டறிந்தால் சிகிச்சை அளிப்பது எளிதாக இருக்கும். 30 வயதை கடந்தவர்கள் மருத்துவரின் அறிவுரைக்கேற்ப குடும்ப வரலாறில் உள்ள நோய்க்கேற்ப குறிப்பிட்ட இடைவெளியில் பரிசோதனை செய்ய வேண்டும்.
வயிற்று ஸ்கேன் செய்யும் போது சிறுநீரகத்தின் முழு நிலையும் பார்க்கலாம். அதில் சிறுநீரக கல் மற்றும் சிறுநீரகத்தில் இருக்கும் கட்டி இரண்டின் வித்தியாசத்தையும் உணரமுடியும். கட்டி இருந்தால் உரிய பரிசோதனைகளுக்கு பிறகு உறுதி செய்யப்பட்டு ஆரம்ப கட்டத்திலேயே சிகிச்சை அளிப்பது எளிதாக இருக்கும்.
கிட்னி கேன்சர் சிகிச்சை முறை
கிட்னி கேன்சர் சிகிச்சை முறையில் முன்பு சிறிய கட்டி இருந்தாலும் கிட்னியை எடுக்க வேண்டி இருந்தது. இப்போது ரோபோட் சிகிச்சை மூலம் அந்த கட்டியை மட்டும் நீக்கிவிட முடியும். இவர்கள் வயது குறைவானவர்களாக இருந்தால் இவர்களுக்கு பிற்காலத்தில் பெரிய பாதிப்புகள் வராமல் தடுக்கலாம்.