காதலில் சொதப்புவது எப்படி என்று கேட்டால் இங்கு ஒவ்வொருவரிடமும் ஒரு புத்தகமே இருக்கும். மனிதர்களின் இயல்பான குணம் தவறு செய்வது. ஆனால், அந்த தவறுகளில் இருந்து என்ன கற்றுக் கொள்கிறோம் என்பது மிக முக்கியமான ஒன்று.
ஒரு காதலை முடிவுக்கு கொண்டு வர பெரும் போரெல்லாம் தேவை படாது. ஏதோ ஒரு கடும் வார்த்தை, தவறான செயல், அர்த்தமற்ற கோவம், தேவையற்ற சண்டை , தவறான சந்தேகம் என சின்ன சின்ன விஷயங்களில் கூட பெரிய காவிய காதல்கள் முடிவுக்கு வந்துள்ளன. ஆனால், மீண்டும் அதை ஒன்று சேர்ப்பதற்கு அந்தந்த காதலர்கள் என்ன முயற்சி எடுக்கிறார்கள் என்பதை பொறுத்தே அதன் எதிர்காலம்.
அப்படி உங்களுக்கும் ஏதோ ஒரு சிறு காரணத்தால் காதல் முறிவு ஏற்பட்டு அதற்காக நீங்கள் மிகவும் வருத்தப்பட்டு எப்படியாவது உங்கள் முன்னாள் காதலியோடு சேர்ந்து விட வேண்டும் என்று நினைக்கிறீர்களா ? பின்வரும் இந்த 7 வழிய பின்பற்றுங்க. உங்கள் காதல் வாழ்க்கை பிரகாசமா இருக்கும்.
STEP 1 : முதல் படியே நீங்கள் செய்த தவறை ஒப்புக் கொள்வது. நீங்கள் எதை நினைத்து வருந்துகிறீர்களோ அதை எந்த வித ஈகோவும் இல்லாமல் ஒப்புக் கொண்டு அதற்கு பொறுப்பேற்று கொள்ள்ளுங்கள்.
STEP 2 : உங்களின் தவறுக்கு மன்னிப்பை கேட்டுவிடுங்கள். தவறுக்கு மன்னிப்பு கேட்பதில் எந்த தவறும் இல்லை. இதனால், உங்கள் கப்பல் கவிழ போவதில்லை. எனவே, உணர்வுபூர்வமான உங்கள் மன்னிப்பை உடனே கேட்டு விடுங்கள்.
STEP 3 : இப்படி நீங்கள் கேட்டவுடன் உங்களுடன் வந்து விட மாட்டார். அவருக்கு இது அதிர்ச்சியாக கூட இருக்கலாம். எனவே, அவருக்கு இது போன்ற சூழலில் பலவிதமான குழப்பங்கள் மனதில் எழலாம். எனவே, அவர் கேட்கும் கேள்விகளுக்கு ஒளிவு மறைவின்றி உண்மையான பதிலை கொடுங்கள். பொய் சொல்வது தற்காலிக தீர்வை கொடுத்தாலும், பின்னால் உறவை முறித்து வைக்க அதுவே காரணமாக அமைந்து விடும்.
STEP 4 : வழக்கம் போல எனக்கென்ன என்று இருக்காதீர்கள். அவர் பேசும்போது அவரின் உணர்வுகளை புரிந்து கொள்ள முயற்சியுங்கள். உங்களின் கவனத்தை முழுமையாக அவர் மீது செலுத்துங்கள். அதே போல், உங்களின் உணர்வுகளையும் வெளிப்படுத்துங்கள்.
STEP 5 : அவசரப்படாமல் இருப்பது அவசியம். நீங்கள் திருந்தி வந்துவிட்டீர்கள் என்பதற்காக உடனடியாக அவர் உங்களை புரிந்துக் கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்க கூடாது. எனவே, அவர் மனது ஒரு நிலைப்பாட்டிற்கு வரும் வரை காத்திருங்கள். உடனடியாக பதிலை எதிர்பார்த்து அவரை கொடுமை படுத்தாமல் இருங்கள்.
STEP 6 : முன்னாள் என்ன தவறு செய்துள்ளீர்களோ அதை முழுமையாக புரிந்து திருந்தி உதறிய பிறகே அவரிடம் செல்ல வேண்டும். ஏனெனில் உங்களது முந்தைய தவறுகளின் ஒரு சுவடு கூட இந்த முறை தெரிய கூடாது. அதற்கென்று புதிய தவறு செய்து கொள்ளலாம் என்று இல்லை. முடிந்தளவு தவறுகளை குறைக்க பாருங்கள்.
STEP 7 : நீங்கள் எவ்வளவு அவரை காதலிக்கிறீர்கள், அவர் இன்றி எவ்வளவு மோசமாக உணர்கிறீர்கள் என்பதை அவருக்கு புரிய வைக்க முயற்சி செய்யுங்கள். அது கொஞ்சம் ஸ்மூத் ஆக இருக்க வேண்டும். புரிய வைக்கிறேன் என்ற பெயரில் கொடுமை படுத்தி விட கூடாது.
STEP 8 : அவரோடு மனம் திறந்த உரையாடலை மேற்கொள்ளுங்கள். எதை மாற்ற வேண்டும்? எது சரியில்லை? என்ன தேவை? என்பதை கேளுங்கள். அப்படி தெரிந்துக் கொண்டு அது நியாயமானதாக இருந்தால் மாற்றி கொண்டு வாழ முயற்சி செய்யுங்கள்.
STEP 9 : பொறுமையே பெருமை என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் எவ்வளவு கோவக்காரராக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், அது நியாயமானதாக இருக்க வேண்டும். உங்கள் முன்னாள் காதலி உங்களது தவறுகளை சுட்டிக் காட்டகிறார் என்றால் அதை திறந்த மனதோடு உள்வாங்க முயற்சி செய்யுங்கள். பின் எது சரி எது தவறு என்று நியாயமாக நீங்களே உங்களை கேட்டுக் கொள்ளுங்கள். பின் தவறுக்கு மன்னிப்பை கேட்டுவிட்டு அடுத்தக் கட்டத்தை நோக்கி நகருங்கள்.
STEP 10 : இந்த முயற்சியில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். உங்கள் முன்னாள் காதலி நீங்கள் உணர்ந்து வருவதற்குள் உங்கள் காதலில் இருந்து முழுமையாக நகர்ந்திருக்கலாம். அல்லது வேறு ஏதோ காரணத்திற்காக இந்த காதல் மீண்டும் வேண்டாம் என்று முடிவெடுத்திருக்கலாம். எனவே, அவரின் முடிவுக்கு மதிப்பு கொடுத்து அடுத்த வேலையை பார்த்து கொண்டு நகருவதே எல்லோருக்கும் நல்லது.