பண்டைய இந்தியாவிலும் சரி, தற்போதும் சரி பாலியல் உறவுகள் மற்றும் கலாச்சாரம் சார்ந்து, உலகிலேயே தனித்துவமாகவே இருக்கிறது. எந்த இடங்களில் தம்பதிகள் உடலுறவு கொள்ளலாம், எந்த இடங்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு - ரூ. 24,999/-
உலகிலேயே நம் இந்திய கலாச்சாரம் மிகவும் தனித்துவமானது, மற்றவர்களை விட மேம்பட்டது என்றே சொல்லலாம். இங்கு உள்ள இலக்கியங்கள், வேதங்கள் மனிதன் எப்படி வாழ வேண்டும், எந்த விஷயங்கள் செய்யலாம், செய்யக்கூடாது என விவரித்துள்ளது.
அதில் ஒன்று வாஸ்து சாஸ்திரம். இதைக் கடைப்பிடித்தால் வீட்டில் சுபிட்சமும், ஆரோக்கியம், செல்வம் குறையாது இருக்கும். இதில் எந்த இடங்களில் தம்பதிகள் நெருக்கமாக இருக்கலாம், எந்த இடங்களில் எல்லாம் உறவு கொள்வதோ, நெருக்கத்தைக் காட்டுவது கூட தவறு என குறிப்பிடப்பட்டுள்ளது. இதை விரிவாக இங்கு பார்ப்போம்.
இந்த உலகம் இயங்குவதே இதன் அடிப்படையில் தான். ஒரு இனம் அழியாமல் இருக்கவும், அடுத்தடுத்த நிலைக்கு செல்ல உதவுவது. கோவில்களிலும் தம்பதிகள் உறவு, எப்படி அன்பாக தம்பதிகள் இருக்கிறார்கள் என்பதை விளக்கும் வகையில் சிலைகள் வடிக்கப்பட்டுள்ளதைப் பார்க்க முடியும்.
பண்டைய முனிவர்களின் வழிகாட்டுதல் :
தாம்பத்தியம் எனும் பாலியல் உறவும் மிகவும் புனிதமானது தான். ஆனால் அது எப்படி புனிதமான நெறிமுறையின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுகிறதோ அதைப் பொருத்து தான் அமையும் என பண்டைய முனிவர்கள் சில நெறிமுறைகளை வகுத்து வைத்துள்ளனர்.
பண்டைய காலங்களில் ஒவ்வொன்றிற்கும் ஒரு ஒழுங்கு முறைகளை வகுத்து வைத்திருந்தனர். அது காலப் போக்கில் மாறிக் கொண்டே வந்துள்ளன. தாம்பத்திய உறவின் நோக்கும் குறித்து அப்போதே அறிஞர்கள் விவாதிக்ககூடியதாக இருந்திருக்கிறது.
விளைவுகள் மோசமாக இருக்கும் :
இன்றைய மாறி வரும் காலத்தில் இதனை புனிதமாக கருதாமல், நாம் பல தவறுகளை செய்து வருகின்றோம். இது அந்த நபருக்கு மட்டுமல்லாமல், இந்த சமூகத்திற்கும் சில மோசமான விளைவுகளை ஏற்படுத்தலாம்.
இந்த இடங்களில் தாம்பத்தியம் கூடாது:
ஆற்றங்கரை அருகே உறவு கொள்ளக் கூடாது :
சாஸ்திரங்களில் ஆற்றங்கரை அருகே உறவு கொள்வது கூடாது என குறிப்பிடப்படுகிறது. அதாவது ஆற்றங்கரை ஓரம் உறவு கொண்ட பாராசரா மற்றும் சத்யவதியின் உறவால் மகாபாரத போருக்கு வழிவகுத்தது.
ஆறு, நதிகள் மிகவும் புனிதமாக கருதப்படுகிறது. ஆறு, நதியில் செல்லும் நீரின் சலசலப்பு கேட்காத இடத்தில் உறவு கொள்ள சிறந்த இடம்.
நோய்வாய்ப்பட்ட நபரின் அருகில் தாம்பத்தியம் கூடாது :
நோய்வாய்ப்பட்ட ஒருவர் ஓய்வெடுக்கும் இடத்திற்கு அருகில் தம்பதிகள் நெருக்கமாக இருக்க கூடாது என்று அறிவுறுத்தப்படுகிறது. ஒரு நபர் மரணப் படுக்கையில் இருக்கும் போது, அதே வீட்டில் இருக்கும் தம்பதிகள் நெருக்கத்தையும், உடல்உறவையும் தவிர்க்கவும்.
நெருப்பின் முன்னிலையில் உறவு கூடாது :
ஆன்மிக நோக்கங்களுக்காக ஏற்படுத்தப்பட்ட யாகம், ஹோமம் போன்ற நெருப்புக்கு அருகில் தம்பதிகள் ஒருபோதும் உடல் உறவில் ஈடுபடக்கூடாது.
அடிமை வீடு
அடிமைகள் சிறைபிடிக்கப்பட்ட எந்த இடத்திலும் தம்பதிகள் உறவுகளை கொள்ளக்கூடாது என்று சாஸ்திரங்கள் எச்சரிக்கின்றன.
இன்னொருவரின் வீடு
ஒருவரின் வீட்டிற்குச் விருந்தாளியாக செல்லக்கூடிய ஒரு ஜோடி, அங்கு ஒருபோதும் உடல் உறவில் ஈடுபடக்கூடாது.
வாஸ்து சாஸ்திர பிரச்னை இருந்தால் முதலில் பாதிப்பது குடும்ப தலைவன் தான்! - வீட்டில் இந்த பகுதியில் தூங்கினால் குடும்பத்தில் பிர்சனை தான் ஏற்படும்
கோயிலின் உள்ளே அல்லது முன் தாம்பத்தியம் கூடாது :
கோவில் வளாகத்திலோ அல்லது அதற்கு முன்பாகவோ வீடு கட்டக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் கோவில் அருவில் வீடு இருப்பின், அதன் படுக்கையறை கோயிலை நோக்கி, அருகில் இருக்கக்கூடாது என்பது சாஸ்திரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒரு பிராமணன் அல்லது வேறு எந்த மரியாதைக்குரிய நபர் வீட்டில் இருக்கும் போது உடல் உறவை கொள்ளகூடாது.
குழந்தை முன்னிலையில் ஒருபோதும் உறவு கொள்ள கூடாது :
சாஸ்திரங்களில் குறிப்பிடப்பட்டுள்ள தன் படி, தம்பதியினர் அருகில் கைக்குழந்தையோ அல்லது நடக்கப்பழகிய குழந்தை இருக்கும் போது, அவர்களை அருகில் வைத்துக் கொண்டு தம்பதிகள் உடல் உறவை மேற்கொள்வது பெரும் பாவம் என குறிப்பிடப்படுகிறது.
ஒருவரின் இறந்த உடல் இருப்பின் :
சாஸ்திரங்களின்படி, ஒருவர் இறந்த பிறகு, அவரது உடலை வீட்டில் வைத்திருக்கும் போது, அதே கூரையின் கீழ் நீங்களும் இருக்கிறீர்கள் என்றால், கட்டாயம் நீங்கள் அங்கு உடலுறவை மேற்கொள்ளக்கூடாது.
தற்போது அடுக்குமாடி கட்டிடத்தில் வாழ்பவர்களுக்கு இந்த விதி முற்றிலும் பொருந்தும்.