எவ்வளவு திட்டமிட்டு படுக்கைக்குச் சென்றாலும் சில ஆண்களால் நீண்ட நேரம் தாக்குப்பிடிக்க முடியவில்லை என்று வேதனைப்படுவதுண்டு. அதற்கு உடலுக்குத் தேவையான அளவு ஸ்டாமினா மிக முக்கியம். வழக்கமான உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை ஆகியவற்றோடு சேர்த்து தினமும படுக்கைக்குச் செல்லும்முன் கீழ்வரும் பானங்களில் ஏதேனும் ஒன்று குடித்துவிட்டுச் செல்லுங்கள். கட்டிலில் நீண் நேரம் தாக்கு பிடிக்கவும் பாலியல் விரு்பத்தை அதிகரிக்கவும் செய்ய முடியும்.
பாலியல் இன்பத்தை மட்டும் அனுபவிக்க அதிக நேரம் தேவையில்லை தான் என்றாலும் பெரும்பாலான தம்பதிகள் படுக்கையில் இருக்கும் நேரத்தை தங்களுக்கான குவாலிட்டி டைமாக பார்க்கிற போது உடலுறவு நேரத்தை அதிகரிக்க விரும்புகிறார்கள். இது இருவருக்குமான நெருக்கத்தை கூடுதலாக்குகிறது. அத்தகைய கால நீட்டிப்புக்கான ஸ்டாமினாவை உணவுகள் மற்றும் ஆரோக்கியமான சில பானங்களில் இருந்து தான் பெற முடியும்.
படுக்கையில் நீண்ட காலம் நீடிக்க உதவும் தண்ணீர்
உங்கள் பாலியல் வலிமையை மேம்படுத்த பல்வேறு வைத்தியங்களை முயற்சித்து இருப்பீர்கள். என்றைக்காவது உடலுறவுக்கு முன்பாக தண்ணீர் குடித்திருக்கிறீர்களா?
தண்ணீர் குடிப்பது உடலை நீரேற்றமாக வைத்திருப்பதோடு பாலியல் ஆர்வத்தைத் தூண்டவும் உதவி செய்கிறது. அதோடு பாலியல் உச்சக்கட்டத்தை அடைவதற்கு இந்த தண்ணீர் உதவி செய்கிறது.
படுக்கையில் நீண்ட காலம் நீடிக்க கற்றாழை
கற்றாழை அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆன்டி - பயாடிக் பண்புகளும் கொண்டிருக்கிறது.
இது நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் ஆண்களுக்கு வீரியத்தை மேம்படுத்த உதவுகிறது.
கற்றாழையில் உள்ள அதிகமான பாஸ்பரிக் அமிலம் உங்கள் பாலியல் செயல்பாடு மற்றும் உணர்திறனை மேம்படுத்த உதவி செய்கிறது. தசைகளை நெகிழ்வுத் தன்மையோடு வைத்திருப்பதோடு உடலுறவுக்கான உங்கள் விருப்பத்தை அதிகரிக்கிறது.
மேலும் உடலில் டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தியை அதிகரித்து பாலியல் ஆர்வத்தைக் கூட்டுகிறது.
படுக்கையில் நீண்ட நேரம் நீடிக்க வாழைப்பழ மில்க் க்ஷேக்
வாழைப்பழத்தில் உள்ள பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் ஆகியவை பாலியல் தூண்டலை அதிகரிக்கச் செய்கின்றன.
வாழைப்பழத்தில் நடஸ் மற்றும் விதைகள் சேர்த்து தயாரிக்கப்பட்ட மில்க் ஷேக் பாலியல் விருப்பத்தை உடனடியாகத் தூண்டக்கூடியது.
வாழைப்பழத்தில் உள்ள ப்ரோமெலைன் என்சைம் உங்கள் பாலியல் விருப்பத்தை அதிகரிக்கச் செய்து படுக்கையில் நீண்ட நேரம் நீடித்திருக்க உதவி செய்கிறது.
படுக்கையில் நீண்ட நேரம் நீடிக்க தர்பூசணி ஜூஸ்
தர்பூசணி அதிகப்படியான தண்ணீர்ச்சத்தும் ஊட்டச்சத்துக்களும் நிறைந்தது. உங்களை நீர்ச்சத்துடன் வைத்திருக்கச் செய்வதோடு படுக்கையில் நீண்ட காலம் நீடிக்க உதவுகிறது.
பிறப்புறுப்பிற்கு ரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவும் சில அமினோ அமிலங்கள் தர்பூசணியில் நிறைந்துள்ளன. பிறப்புறுப்பில் ரத்த ஓட்டம் அதிகமாக இருக்கும்போது விறைப்புத் தன்மையும் அதிகரிக்கும். அது படுக்கையில் நீண்ட காலம் நீடிக்கவும் உதவும்.
தர்பூசணி ஜூஸ் தயாரிக்கும்போது அவற்றுடன் பூசணண விதை போன்றவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம்.
படுக்கையில் நீண்ட காலம் நீடிக்க பால்
மிகவும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த, பால் அந்தரங்க வாழ்க்கையை மேம்படுத்தவும் உதவி செய்கிறது.
பாலியல் வீரியத்தை அதிகரிப்பதற்கும் பாலியல் விருப்பத்தை தூண்டவும் பால் உதவி செய்யும்.
பாலியல் ஹார்மோன்களை உற்பத்தி செய்ய உங்கள் உடலுக்கு போதுமான இயற்கை கொழுப்பு தேவைப்படுகிறது.
அதனால் படுக்கைக்குச் செல்லும்முன் பால் அருந்திவிட்டு செல்வது உங்களை பாலியல் உறவில் நீண்ட நேரம் நீடித்திருக்கச் செய்யும்.
படுக்கையில் நீண்ட நேரம் நீடிக்க மாதுளை ஜூஸ்
மாதுளை பழத்தில் இயற்கையாகவே புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள் நிறைந்திருக்கின்றன. விறைப்புத் தன்மை குறைபாட்டால் நீண்ட நேரம் படுக்கையல் செயல்பட முடியாமல் இருப்பவர்களுக்கு இது மிகச்சிறந்த பலனைக் கொடுக்கும்.
இதிலுள்ள வைட்டமின் சி, பாலிபினைல் மற்றும் ஆன்டி இன்பிளமேட்டரி பண்புகள் மற்றும் பிற மினரல்கள் எலும்பு மற்றும் தசைகளை வலுப்படுத்தி பாலியல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவி செய்கிறது.
அதனால் நீண்ட நேரம் உடலுறவில் செயல்பட முடியாமல் இருப்பவர்கள் தினமும் இரவு படுக்கைக்குச் செல்லும்முன் மாதுளை ஜூஸை சர்க்கரை சேர்க்காமல் குடித்து வர நல்ல பலன் கிடைக்கும்.
படுக்கையில் நீண்ட நேரம் நீடிக்க ஸ்ட்ராபெரி ஸ்மூத்தி
பாலியல் தொடர்பான பிரச்சனைகளுக்கு ஸ்ட்ராபெர்ரி மற்றும் சாக்லேட் ஒரு சிறந்த தீர்வாக இருக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஸ்டிராபெர்ரியில்உ உள்ள வைட்டமின் சி மற்றும் ஆன்டி - ஆக்சிடண்ட்டுகள் உடலின் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும், பாலியல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவி செய்கிறது.
ஸ்ட்ராபெர்ரியுடன் நட்ஸ், விதைகள்,ஆகியவற்றைச் சேர்த்து ஒரு ஸ்மூத்தி செய்து எடுத்துக் கொள்ளலாம். இந்த ஸ்மூத்தியின் மேல் லேசாக டார்க் சாக்லெட்டைத் துருவிச் சேர்த்துக் கொள்ளலாம்.
இது பாலியல் தூண்டலை அதிகரிக்கச் செய்வதோடு நீண்ட நேரம் படுக்கையில் நீடித்திருக்கவும் பயன்படுகிறது.