உடலுறவு குறித்து பல்வேறு நாடுகளில், பல்வேறு விதமான கட்டுக்கதைகள் சொல்லப்படுகின்றன. அந்தவகையில் பொதுவாக கூறப்பட்ட 3 தகவல்களின் உண்மைத் தன்மையை அறிவியல் ஆதாரங்களுடன் தெரிந்துகொள்வோம்.
இந்தியாவில் மட்டுமில்லாமல் உலகளவில் பல்வேறு நாடுகளில் உடலுறவு தொடர்பாக பல்வேறு கட்டுக்கதைகள் பேசப்படுகின்றன. அதில் பல கதைகள் எந்தவித அறிவியல் ஆதாரங்களின்றி வாய்வழியாகவே சொல்லப்பட்டு வருகிறது. மக்கள் பலரும், இதை காலங்காலமாக நம்பி வருகின்றனர். அத்துடன் மற்றவர்களுக்கும் அதைச் சொல்லி, கட்டுக்கதைகளை தொடர்ந்து நிலைபெறச் செய்கின்றனர். அந்தவகையில் உடலுறவு சார்ந்து பல்வேறு கதைகள் நிலவினாலும், பொதுவாக பேசப்பட்ட 3 தகவல்களின் உண்மைத்தன்மையை குறித்து இங்கு ஆராயப்போகிறோம். அதுகுறித்த தகவல்களை அறிவியல்பூர்வமாக தெரிந்துகொள்வோம்.
ஆண்களுக்கு எப்போதுமே பாலியல் குறித்த சிந்தனை இருக்கும்
ஆண்கள் மட்டுமில்லாமல், எந்தவித ஆரோக்கியமான உயிரினத்துக்கும் உடலுறவு சார்ந்த சிந்தனை இயல்பாகவே இருக்கும். அது மிகவும் இயற்கையான ஒன்றுதான். இதில் பெரிதப்படுத்த எதுவும் கிடையாது. இதுதொடர்பாக நடத்தப்பட்ட அறிவியல் ஆய்வில், ஆண்களில் 54 சதவீதத்தில் தினமும் பலமுறை உடலுறவில் ஈடுபடுவது குறித்து சிந்தனை செய்கின்றனர். ஆனால் அதில் 43 சதவீதத்தினர் மட்டுமே வாரத்துக்கு சிலமுறை உறவுகொள்கின்றனர். அதிலும் 4 சதவீதத்தினர் ஒரு மாதத்துக்கு ஒருமுறை மட்டுமே உறவில் ஈடுபடுகின்றனர்.
ஆணின் மனது மட்டுமில்லாமல், யாருடைய மனதும் எப்படி சிந்திக்கிறது? ஏன் சிந்திக்கிறது? என்பதை துல்லியமாகச் சொல்ல முடியாது. அதேபோன்று தான் ஆண்கள் செக்ஸ் குறித்து சிந்திப்பதை துல்லியமாக கணிக்க முடியாது.ஆனால் ஒன்றை மட்டும் உறுதியாக சொல்லலாம், ஆண்களுக்கு எப்போதும் செக்ஸ் குறித்து எண்ணம் இருப்பது கிடையாது. அதிலும், 7 விநாடிக்கு ஒருமுறை அவர்கள் செக்ஸ் குறித்து சிந்திப்பது கிடையவே கிடையாது.
பெண்கள் பெரியளவிலான ஆணுறுப்பை தான் விரும்புகின்றனர்
இந்த கட்டுக்கதையால் பாதிக்கப்பட்ட ஆண்கள் நிறையபேர். இதனால் குற்ற உணர்வு வந்து, திருமணத்தை வெறுக்கும் அளவுக்கு சென்ற ஆண்களும் உண்டு. பெண்ணை திருப்திப்படுத்த முடியாது என்ற எண்ணத்தில் பல மாத்திரைகளை சாப்பிட்டு உடல்நலனைக் கெடுத்து கொண்டவர்களும் உண்டு. உண்மையில் அதுபோன்ற மாத்திரைகளை விற்பனை செய்ய நிறுவனங்கள் செய்த தந்திரம் தான் இந்த கட்டுக்கதை என்றும் கூறப்படுவதுண்டு. திருமணத்துக்கு தயாராகிக் கொண்டிருக்கும் இளைஞர்கள் பலருக்கும் இந்த சந்தேகம் இருக்கிறது. அதனால் அறிவியல் ஆதாரங்களுடன் இந்த விஷயத்தை அணுகுவோம்.
பெண்ணுறுப்பு சராசரியாக 4 முதல் 6 அங்குலம் வரை மட்டுமே இருக்கும். அதிலும் பிறப்புறுப்பின் வெளிப்புறுத்தல் 3-ல் ஒரு பகுதி மட்டுமே உணர்திறன் கொண்டது. உட்பகுதிகள் உணர்வற்றது. அதனால் வெறும் 2 அங்குல ஆண்குறியை வைத்திருப்பவர்கள் கூட, பெண்களை கலவியில் திருப்திப்படுத்த முடியும். அதனால் ஆண்குறியின் அளவுக்கும், உடலுறவில் ஏற்படும் திருப்திக்கும் எந்த சம்மந்தமும் கிடையாது. அதனால் ஆண்குறி சிறியதாக இருப்பதாக ஆண்கள் வருத்தப்படுவதை இப்போதே தவிர்த்திடுங்கள்.
உடலுறவு மீது அதிக ஈடுபாடு கொண்டவர்கள் ஆண்கள் தான்
இந்த கூற்று கிட்டத்தட்ட உண்மை தான். பெண்களை விடவும் ஆண்களுக்கு உடலுறவை அதிகம் விரும்புபவர்களாக உள்ளனர். அதாவது ஆண்களுக்கு உடல் மற்றும் உணர்வு சார்ந்த நெருக்கம் மிகவும் முக்கியமாக தேவைப்படுகிறது. அது அவர்களுடைய இயல்பான நடவடிக்கைகளில் ஒன்று. அதனால் இயல்பாக நடைபெறும் உடலுறவு அவர்களை திருப்திப்படுத்துவது கிடையாது.
அதற்கு காரணம், செக்ஸ் மற்றும் அது சார்ந்த நடவடிக்கைகளில் ஆண்களுக்கு எதிர்பார்ப்பு அதிகம். அதேபோன்று கற்பனை திறனும் அதிகம். இதனால் அவர்கள் ஒவ்வொருமுறையும் உடலுறவுகொள்கையில், அதை மதிப்பிட்டு செய்துகொண்டே இருப்பார்கள். அடுத்தமுறை இலக்கை அடைய முனைப்புகாட்டுவார்கள். அதனால் ஆண்களின் இயல்புப்படி உடலுறவு மீது ஈடுபாடு பெண்களை விடவும் ஆண்களுக்குத்தான் அதிகம் உள்ளது