பெண் சடலங்களை பாலியல் வன்கொடுமை செய்யும் கொடூரம்:
30 Apr,2023
பாகிஸ்தானில் கல்லறையில் பூட்டுப் போட்டு பாதுகாக்கும் அவலம்!
பாகிஸ்தானில் பெண் கல்லறைகளுக்கு பூட்டு போடும் அவல நிலைபாகிஸ்தானில் பெண் கல்லறைகளுக்கு பூட்டு போடும் அவல நிலை
பாகிஸ்தானில் உயிரிழந்த பெண் சடலங்களின் கல்லறைகளுக்கு பூட்டு போட்டு பாதுகாக்க தொடங்கியுள்ளனர்.
பாகிஸ்தானில் உள்ள பெற்றோர், பெண் பிள்ளைகள் இறந்தால், அவர்களின் கல்லறைக்கு பூட்டு போட்டு வைக்கும் அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஆம், பிணங்களை கூட பாலியல் வன்கொடுமை செய்யும் கொடூர நிகழ்வுகள்தான் இந்த சூழலை உருவாக்கியுள்ளது என பாகிஸ்தான் நாளேடான டெய்லி டைம்ஸ் கட்டுரை வெளியிட்டுள்ளது.
2020ஆம் ஆண்டு பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தில் உகாரா எனும் இடத்தில் பெண் பிணத்தை பாலியல் வன்கொடுமை செய்தவர் கையும் களவுமாக பிடிப்பட்டார். 2021ஆம் ஆண்டில் குலாமுல்லா என்னும் ஊருக்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தில் உயிரிழந்து அடக்கம் செய்யப்பட்ட இரவே 18 வயது பெண்ணின் பிணம் பாலியல் கொடுமைக்கு ஆளானது. பட்டியலிட்டு கூறும் அளவுக்கு பாகிஸ்தானில் பிணங்களை பாலியல் கொடுமை செய்வது அதிகரித்துள்ளது. இதனால் தான் பெண்களின் கல்லறைகளுக்கு இரும்பு கம்பிகளை கொண்டு கதவமைத்து பூட்டி வைக்கின்றனர்.