பகலில் நீதிபதி இரவில் ஆபாச பட நடிகர் -கைது செய்து சிறையில் அடைத்த காவல்துறை
30 Mar,2023
பகலில் நீதிபதியாகவும் இரவில் ஆபாச பட நடிகராகவும் இருந்த ஒருவரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்த சம்பவம் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்காவில் உள்ள நியுயோர்க் நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றிய 33 வயது கிரிகோரி என்பவர் பகலில் நீதிபதியாக பணியாற்றிய நிலையில் இரவில் ஆபாச பட நடிகராக இருந்து உள்ளார்.
மேலும் ஆபாச படத்தில் நடிப்பதற்காக அவர் ரசிகர்களிடமிருந்து பணம் வசூலித்துள்ளதாகவும் தெரிகிறது.
இது குறித்து ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் வைரல் ஆன நிலையில் காவல்துறையினர் இதனை தீவிரமாக எடுத்துக் கொண்டு விசாரித்தனர். அப்போது அவர் ஆபாச பட நடிகர் என்பது உறுதி செய்யப்பட்டது.
அது மட்டுமன்றி அவர் நியுயோர்க் நீதிமன்ற நீதிபதி என்பதை அறிந்ததும் காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு தற்போது சிறையில் அடைத்துள்ளனர்.