பூமியை விட 20 மடங்கு பெரிய வெடிப்பு சூரியனில் ஏற்பட்டுள்ளது- எம்மை நோக்கி வரும் தீ
30 Mar,2023
சூரியனில் திடீரென பாரிய வெடிப்பு ஒன்று ஏற்பட்டுள்ளது. இதன் விட்டம் பூமியை விட 20 மடங்கு பெரிதானதாக உள்ளது என்று நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளார்கள். அதில் இருந்து தீ பிழம்பு வெடித்து சிதறியுள்ளது. மணி ஒன்றுக்கு 1.8 மில்லியன் மைல் வேகத்தில் செல்லக் கூடிய தி பிழம்பு இது. தற்போது இந்த துகள்கள் பூமியை நோக்கி படு வேகமாக வந்துகொண்டு இருக்கிறது. இதனால் சில சாட்டலைட் செயல் இழக்க கூடும் என்று தற்போது விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்கள்.
இப்படியான ஒரு பெரிய வெடிப்பு இதுவரை பதிவாக வில்லை. அத்தோடு சூரியனில் ஒரு பெரும் பள்ளத் தாக்கு ஏற்பட்டுள்ளது. இதன் விட்டம், பூமியை விட 20 மடங்கு பெரிதாக உள்ளது. இந்த பள்ளத் தாக்கு ஏன் ஏற்பட்டது. இது நிலந்தரமானதா இல்லை தற்காலிகமானதா என்பது தெரியவில்லை. இதனால் சூரிய வெப்பம் குறைவடையுமா ? என்ற அச்சமும் எழுந்துள்ளது.