மூதாட்டிகளை கொன்று பாலியல் பலாத்காரம் குற்றவாளிகள் கைது!
25 Mar,2023
உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள மூதாட்டிகளைக் கொன்று சடலங்களை பாலியல் பலாத்காரம் செய்த இருவரை போலீசார் பிடித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வருடம் ஒரு வயல்வெளியில் மூதாட்டி நிர்வாணமான நிலையில் சடலமாக கிடந்தார். சடலத்தை போலீசார் கைப்பற்றி பிரதே பரிசோதனைக்கு அனுப்பிய நிலையில், கொலை செய்யப்பட்ட பிறகு மூதாட்டி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தெரியவந்தது. இதேபோன்று கடந்த டிசம்பர் மாதமும் ஒரு மூதாட்டியை கொலை செய்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் ஒரு மூதாட்டியை இருவர் கொலை செய்ய முயற்சி செய்த நிலையில் மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்டு கிராம மக்கள் ஓடி வந்து ஒருவரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவரிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அம்ரீந்தர் என்பது தெரிய வந்தது. இவர் கொடுத்த தகவலின் பேரில் சுரீந்தரை நேற்று காவல்துறையினர் கைது செய்தனர்.
இவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அரிசி ஆலையில் இருவரும் வேலை செல்போனில் ஆபாச படம் பார்ப்பதை வழக்கமாக வைத்திருந்ததும் தெரிய வந்தது. ஆபாச படம் பார்த்ததில் இருவரும் சைக்கோவாக மாறி தனியாக இருக்கும் மூதாட்டிகளை குறிவைத்து அவர்களை கொலை செய்து பாலியல் பலாத்காரம் செய்தது விசாரணையில் தெரிய வந்தது. மேலும் இவர்களிடம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்