லொறிகளை வழிமறித்து கரும்பைச் சுவைத்த காட்டு யானை - கம்போடியாவில் சம்பவம்
13 Mar,2023
கம்போடியாவில் கரும்புகளை ஏற்றி செல்லும் லொறிகளை தேடி வந்து மறித்து கரும்பைச் சுவைத்த காட்டு யானையின் காணொளி இணையத்தில் அதிகம் பேரால் பார்க்கப்பட்டு வருகிறது.
வனப்பகுதியை ஒட்டிய வீதி வழியாக செல்லும் ஏனைய வாகனங்களை கண்டுகொள்ளாத அந்த யானை, கரும்புக் கட்டுகளை ஏற்றி வரும் லொறிகளை மட்டும் குறிவைத்து நடு வீதியில் நின்று லொறியை மறித்துக் கொள்கிறது.
பின்னர் தனக்குத் தேவையான கரும்புகளை மட்டும் எடுத்துக் கொண்டு அமைதியாக இருந்து விடுகிறது. யானையின் இந்தச் செயல் இணையத்தில் அதிகம் பேரால் பார்க்கப்பட்டு வருகிறது.