அமெரிக்காவின் சிலிக்கான் வேலி வங்கி திவால் - முதலீட்டாளர்கள் அதிர்ச்சி
12 Mar,2023
அமெரிக்காவின் 16வது மிகப்பெரிய வங்கியான சிலிக்கான் வேலி வங்கி திவாலானதால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். வாஷிங்டன், அமெரிக்காவின் 16வது மிகப்பெரிய வங்கி சிலிக்கான் வேலி வங்கியாகும். கலிபோன்ரியாவை தலைமையிடமாக கொண்ட இந்த வங்கி புதிதாக தொழில் தொடங்கும் நிறுவனங்களுக்கு கடன் வழங்குதல் மற்றும் வெஜ்ஞர் கேப்பிடல் நிறுவனங்களிடமிருந்து அதிகப்படியான டெபாசிட் பெறுவதும், நிதி உதவி வழங்கும் சேவையை செய்து வருகிறது. 2022 டிசம்பர் 31-ம் தேதி நிலவரப்படி சிலிகான் வேலி வங்கியின் மொத்த சொத்து மதிப்பு 209 மில்லியன் டாலர்களாகவும், 174 மில்லியன் பில்லியன் டாலர்கள் டெபாசிட்டாகவும் இருந்தது. இந்நிலையில், சிலிகான் வேலி வங்கி திவாலானது. வெறும் 48 மணி நேரத்தில் சிலிக்கான் வங்கி பங்குகளின் மதிப்பு 60 சதவிகிதத்திற்கும் அதிகமாக சரிந்தது. நிதி நிலை அறிக்கையில் உள்ள இடைவேளையை சரிகட்ட
2 பில்லியன் டாலர்கள் நிதி பெற திட்டமிட்டுள்ளதாக சிலிகான் வேலி வங்கி அறிவித்த 48 மணி நேரத்தில் அதன் பங்குகள்
கடுமையாக சரிந்தன. அமெரிக்காவில் பெடரல் வங்கி தொடர்ச்சியாக வட்டி விகிதத்தை தொடர்ந்து அதிகரித்ததால் சிலிகான் வேலி வங்கி திவாலானதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், சிலிகான் வேலி வங்கியின் பங்குகள் தொடர்ந்து சரிவை சந்தித்ததால் பங்குச்சந்தையில் அந்த வங்கி பங்குகளின் விற்பனை நிறுத்தப்பட்டது. மேலும், சிலிகான் வேலி வங்கியின் பங்குகளை அமெரிக்க மத்திய டெபாசிட் காப்பீடு நிறுவனம் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளது. அமெரிக்காவின் சிலிகான் வேலி வங்கி திவாலானதால் அந்த வங்கியில் முதலீடு செய்தவர்கள் தங்கள் பணத்தை திரும்பப்பெற வங்கி வாசலில் காத்திருந்தனர். இந்த வங்கியின் வீழ்ச்சி ஒட்டுமொத்த உலக பொருளாதாரத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக, நாளை இந்திய பங்குச்சந்தையில் வங்கி தொடர்பான பங்குகள் பெரும் சரிவை சந்திக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், சிலிகான் வேலி வங்கி தகவல் தொழில்நுட்பத்துறையிலும் அதிக ஆதிக்கத்தை செலுத்தி வந்ததால் தகவல் தொழில்நுட்பத்துறை (ஐடி) தொடர்பான பங்குகளும் சரிவை சந்திக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 2008-ம் ஆண்டுக்கு பின் அமெரிக்காவில் மிகப்பெரிய வங்கி திவாலானது இதுவே முதல்முறையாகும். சிலிகான் வேலி வங்கி திவால் உலக அளவில் வங்கித்துறையில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது