றோவுக்கு தெரியாமல் முக்கிய நகர்வு - பொறிக்குள் சிக்கப்போகும் இந்தியா
06 Mar,2023
அமெரிக்காவின் முக்கிய குறியாக இலங்கை மற்றும் நேபாளம் ஆகியன மாறியிருப்பதாக பிரித்தானிய இராணுவ ஆய்வாளர் கலாநிதி. அரூஸ் கூறுகிறார்.
ஊடறுப்பு நிகழ்ச்சியில் இவ்வாறு கூறிய அவர், நேபாளத்தை கையகப்படுத்துவதன் ஊடாக, இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் பொறிறொன்றை அவர்கள் வைக்கப்போகின்றார்கள் எனத் தெரிவித்துள்ளார்.
தற்போதைய தகவல்களின் படி
அமெரிக்காவின் அதிகாரிகள் குழுவொன்று கடந்த நாட்களில் திடீரென்று இலங்கைக்கு வந்திருந்தனர். இதில் குளோப் மாஸ்டர் சீ - 17 ரக 2 விமானங்களும் வந்திருந்தன. இந்த விமானங்கள் ஏறத்தாள 150 - 200 பேரைக் கொண்டு பயணிக்கக்கூடிய இராணுவ சரக்கு விமானம்.
அதில் வந்தவர்கள் 22 பேர் எனக் கூறுகின்றனர். உண்மையில் எத்தனை பேர் வந்தனர் என்பது தெரியவில்லை.
வந்த அதிகாரிகளில் இந்தோ - பசுபிக் பிராந்தியத்திற்கான துணைச் செயல் அதிகாரியும் உள்ளடங்குகிறார்.
ஆனால், தற்போதைய தகவல்களின் படி, அமெரிக்காவின் சீ.ஐ.ஏ என்ற புலனாய்வு அமைப்பின் தலைவர் வில்லியம் பேர்ண்சும் அன்று இலங்கை வந்திருக்கிறார்.
அவரின் பெயர் அன்று மறைக்கப்பட்டிருக்கிறது. எந்த இடத்திலும் அவரது பெயர் வெளிப்படுத்தப்படவில்லை. அவர் பேட்டிகளும் கொடுக்கவில்லை.
அது எவ்வாறு வெளிப்பட்டது என்று சொன்னால்,
அதே விமானங்கள் இலங்கையில் இருந்து நேபாளத்திற்கு பறந்திருக்கின்றன. இங்கிருந்து சென்றது 2 குளோப் மாஸ்டர் விமானங்கள் - ஆனால், நேபாளத்தில் தரையிறங்கியது 3 குளோப் மாஸ்டர் விமானங்கள். அந்த ஒரு விமானம் இடைநடுவே அந்தப் பயணத்தில் இணைந்திருக்கிறது.
அந்த விமானத்தில் பல இனம்தெரியாத ஆயுதங்கள் இருந்ததாகவும், நிறைய பேர் அதில் வந்ததாவும், அவர்கள் அனைவரும் தரையிறங்கவில்லை எனவும் கூறப்படுகிறது.
றோவுக்கு தெரியாமல் இலங்கையில் நடக்கும் முக்கிய நகர்வுகள், அமெரிக்காவின் மிலேனியம் திட்ட நகர்வு எனப் பல வெளிவராத தகவல்களை பாருங்கள்,