2 லட்சம் காண்டம் குவியலுக்கு நடுவே நடந்த பேஷன் ஷோ... குவியும் பாராட்டு...
26 Feb,2023
காலநிலை மாற்றத்தால் வறலும் வெனிஸ் கால்வாய்கள்... கோண்டோலா சவாரி நிலை
காலநிலை மாற்றத்தால் வறலும் வெனிஸ் கால்வாய்கள்... கோண்டோலா சவாரி நிலை
பேஷன் ஆடைகளுக்கு பெயர் போன நாடுகளில் இத்தாலி முதன்மையானது. இந்நாட்டில் தான் சர்வதேச அளவில் முன்னணி பேஷன் பிராண்டுகள் உள்ளன. அதுபோலவே இத்தாலியில் உள்ள மிலான் நகரில் நடைபெறும் மிலான் பேஷன் ஷோ மிகவும் புகழ் பெற்றது. ஆண்டுதோறும் உலகில் நடைபெறும் டாப் 4 பேஷன் ஷோக்களில் மிலான் பேஷன் ஷோவும் ஒன்றாகும்.
2023 மிலான் பேஷன் ஷோ இத்தாலி நகரில் சிறப்பாக நடைபெற்று வரும் நிலையில், பாலியல் சுகாதாரத்தை உணர்த்தும் விதமாக நடத்தப்பட்ட ஒரு பேஷன் ஷோ பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. முன்னணி ஆடம்பர ஆடை பிராண்ட் நிறுவனமான 'டீசல்'இந்த ஷோவை நடத்தியுள்ளது.
சர்வதேச அளவில் பாலியல் நோய் பரவல் தொடர்பான விழிப்புணர்வுகள், பரப்புரைகள் தீவிரமாக நடத்தப்படுகின்றன. இதை கண்டறிந்து கட்டுப்படுத்தவும் பல ஆய்வுகள் முன்னெடுக்கப்படுகின்றன. நாள்தோறும் சுமார் 10 லட்சம் பேருக்கு பாலியல் சார்ந்த நோய்கள் பரவுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.