மன அழுத்தம் ஏன் ஏற்படுகிறது ?
22 Feb,2023
நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய். உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய் என்பது சுவாமி விவேகானந்தரின் பொன்மொழி ஆகும். எனவே மனதை சரியான திசையில் செலுத்தினால் மனஅழுத்தம் இன்றி நிம்மதியாக இருக்கலாம்.
உடல் ரீதியாக ஒருவர் எவ்வளவு வலிமையாக இருந்தாலும் மனரீதியில் பலவீனமாக இருந்தால் எளிதாக வீழ்த்தி விட முடியும். எனவே உலக அளவில் இருக்கிற நோய்களில் முதலிடத்தில் இருப்பது மன அழுத்தம் தான்.
மனஅழுத்தம் ஏற்படுகிற போது ஒருவரின் செயலும், குணமும் மாறுபடுகிறது. இது அவர்களின் முன்னேற்றம் தடைபடுகிறது. தோல்வி அடைகிற போது எழும் கவலை மன அழுத்தமாக மாறுகிறது.
நினைத்தது நடக்காத போது வரும் ஏமாற்றம், விரக்தி ஆகிறது.
விரும்பியதை அடைய முடியாத போது ஏற்படும் கோபம் ஆத்திரமாக மாறுகிறது.
குடும்பம், தொழில், வாழ்வியல் சூழல்களில் சிக்கல் ஏற்படும் போது மனரீதியாக அழுத்தம் ஏற்படுகிறது. அதை சரியாக கையாள கற்றுக் கொள்ளவேண்டும். இல்லை என்றால் மனிதர்க ளிடம் உளவியல் சிக்கல்கள் அதிகரித்து தவறுகளும், குற்றங்களும் அதிகரிக்க தொடங்கி விடும்.
எனவே மனதை சமநிலையில் நிறுத்தி நிதானமாக செயல்பட முயற்சிக்க வேண்டும்.