10000 பெண்களின் குளியல் வீடியோ.. 30 ஆண்டுகளாக ரகசிய கேமரா.. ஜப்பானை அதிர வைத்த சம்பவம்!
20 Feb,2023
கடந்த 30 ஆண்டுகளாக வெந்நீர் நீரூற்றுகளில் குளித்த 10,000க்கும் மேற்பட்ட பெண்களை இவர்கள் மறைந்திருந்து ரகசியமாக படம் எடுத்த கும்பலை ஜப்பான் காவல்துறை கைது செய்துள்ளது.
ஜப்பான் நாட்டில் உள்ள முக்கிய இயற்கை அமைப்புகளில் ஒன்றாக அங்குள்ள வெந்நீர் நீரூற்றுகள் பார்க்கப்படுகின்றன. அதிக குளிர்ச்சியை கொண்டு நாடான ஜப்பானில் அந்நாட்டு மக்கள் வெந்நீர் குளியலை பெரிதும் விரும்புவார்கள். அங்கு நிலத்தடியில் உள்ள எரிமலையின் தாக்கத்தால் பல வெந்நீர் நீரூற்றுக்கள் உருவாகியுள்ளனர். ஹாட் ஸ்பிரிங்ஸ் எனப்படும் இந்த வெந்நீர் நீரூற்றுகளில் குளிக்க அந்நாட்டில் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் ஆவலுடன் வந்து செல்கின்றனர். உள்நாடு மட்டுமல்லாது வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கில் இந்த வெந்நீர் நீரூற்றில் குளிக்க சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், நூற்றுக்கணக்கான இந்த வெந்நீர் நீரூற்றுகளில் பெண்கள் குளிக்கும் திருட்டுத்தனமாக மறைந்திருந்து அவற்றை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்த கும்பல் ஒன்றை ஜப்பான் காவல்துறையினர் அதிரடி ரெய்டில் கைது செய்துள்ளனர். பிறரின் நடவடிக்கைகளை அவர்கள் அனுமதி இன்றி தெரியமால் மறைந்து பார்த்து பாலியல் இன்பமடைவது வாயூரிசம் என்ற குற்றமாகும். இது பெரும் கிரைம் நெட்வொர்க்காக உலகம் முழுவதும் பரவிக்கிடக்கிறது.
இந்த வாயூரிசம் குற்றத்தில் 30 ஆண்டுகளாக ஈடுபட்டுவந்த 16 பேர் கொண்ட கும்பலை ஜப்பான் காவல்துறை கைது செய்துள்ளது. கடந்த 30 ஆண்டுகளாக வெந்நீர் நீரூற்றுகளில் குளித்த 10,000க்கும் மேற்பட்ட பெண்களை இவர்கள் மறைந்திருந்து ரகசியமாக படம் எடுத்து பெரும் பாலியல் குற்ற வியாபாரத்தை செய்து வந்துள்ளனர். இந்த கும்பலின் தலைவரான 50 வயதான கரின் சைடோவை ஜப்பான் காவல்துறை பிப்ரவரி 1ஆம் தேதி கைது செய்துள்ளது.
இந்த சைடோ தனது 20ஆவது வயதில் இருந்தே பெண்களை ரகசியமாக புகைப்படம் எடுக்கும் குற்ற செயலில் ஈடுபட ஆரம்பித்துள்ளார். தொழில்நுட்ப யுகம் வளரத் தொடங்கிய பின்னர் இந்த புகைப்படங்களை இணையத்தில் விற்று அதை ஒரு பெரிய பிஸ்னஸ் நெட்வொர்காகவே மாற்றி செயல்பட்டு வந்துள்ளார். இவரை பிடித்து தீவிரமாக விசாரித்து வரும் ஜப்பான் காவல்துறை இந்த நெட்வொர்க்கில் தொடர்புடைய அனைவரின் தகவல்கள் மற்றும் பின்னணியை தீவிரமாக திரட்டி வருகிறது.