போரின் இறுதிக்கட்டத்தில் கிடைத்த செய்தி - பிரபாகரன், பொட்டம்மான் உயிருடனா.!
19 Feb,2023
போரின் இறுதிக்கட்டத்தில் முல்லைத்தீவு - நந்திக்கடல் பகுதியில் உள்ள வண்டல் (அலையாத்தை) காடுகளில் நின்று விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் போராடிய செய்தி தனக்கு கிடைத்ததாக அரசியல் ஆய்வாளர் ஜெயபாலன் கூறுகிறார்.
எமது ஊடகத்தின் மெய்ப்பொருள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், இந்தத் தகவல் தன்னைப் போன்றவர்களுக்கு கிடைத்த கடைசி செய்தி எனவும் தெரிவித்தார்.
மூன்றாவது நாட்டிடம் சரண்
ஆனால் விடுதலைப் புலிகள் அமைப்பின் பல தளபதிகள் காப்பாற்றப்பட்டுள்ளதாகவும், பொட்டம்மான் மற்றும் பல தளபதிகள் தென்னாபிரிக்கா, ஈஸ்ரிமோர் ஆகிய நாடுகளில் இருப்பதான செய்திகள் வெளிவந்திருக்கின்றன.
தென்னாபிரிக்கா, ஈஸ்ரிமோர் ஆகிய நாடுகள் விடுதலைப் புலிகள் அமைப்பை காப்பாற்ற வேண்டும் எனும் சித்தார்ந்தத்தில் இருந்ததாகவும் அவர் கூறிகிறார்.
யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் மூன்றாவது நாட்டிடம் விடுதலைப் புலிகள் அமைப்பு சரணடைய தயார் என்றால், அமெரிக்கா சரணாகதியை ஏற்கத் தயாராக இருந்ததாகவும், ஆனால், விடுதலைப் புலிகள் அமைப்பு இதற்கு உரிய பதிலை வழங்கவில்லை எனவும் அவர் கூறுகிறார்.
இது ஒருபறமிக்க, சோனியா அம்மையார் முழு ஈழத்தமிழர்களும் அழிந்தாலும் பறவாயில்லை. பிரபாகரன் இறக்கும் வரை யுத்தம் செய்யும் படி உத்தரவிட்ட தகவலையும் ஜெயபாலன் பகிர்ந்துகொண்டார்.
விடுதலைப் புலிகளின் தலைவர் உயிருடன் இருக்கிறார் எனும் செய்தி அவருக்கு வரலாற்று ரீதியான இழுக்கு என முன்னாள் போராளிகள் தெரிவித்து வரும் கருத்துக்கு பதில் வழங்கிய அவர், போரில் தோற்ற தலைவன் உயிருடன் இருந்தால் இழுக்கென நினைப்பது அறியாமை எனவும் அவர் தெரிவித்தார்.