ஓடும் பேருந்தில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை!
17 Feb,2023
ஓடும் பேருந்தில் 40 வயதான பெண் ஒருவருக்கு பாலியல் தொந்தரவு செய்த குற்றச்சாட்டில் கடற்படை சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குருணாகல் நோக்கி பயணித்த பேருந்தில் வைத்து பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டதாக பொத்துஹெர பொலிஸார் கூறியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட 26 வயதுடைய சந்தேக நபர் திருகோணமலை கடற்படை முகாமில் பணிபுரிந்து வருவதாக கூறப்படுகின்றது.
பெண் பாலியல் தொந்தரவுக்கு உட்படுத்தப்பட்டமை தொடர்பில் பொத்துஹெர பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து, பொலிஸ் குழுவொன்று மல்பிட்டிய பிரதேசத்தில் பஸ்ஸை நிறுத்தி சந்தேக நபரான சிப்பாயை கைது செய்ததாகவும் கூறப்படுகின்றது.