ஐந்து வகை பாட்டி வைத்தியம்!
02 Feb,2023
பொதுவாக சிலருக்கு வித்தியாசமான வலிகள் வரும், இதற்கு என்ன செய்யலாம் என்பது தற்போது இருக்கும் தலைமுறைக்கு சரியாக தெரியாது. இதனை சரிச் செய்வதற்காக சிலர் ஆங்கில மருத்துவரை நாடுவார்கள். இவ்வாறு செய்யப்படும் மருத்துவங்கள் நிரந்தரமான தீர்வை தராது காலப்போக்கில் வயிற்றில் செரிமாண பிரச்சினை ஏற்படுத்தும். அந்தவகையில் நமக்கு ஏற்படும் 5 வகையான நோய்களுக்கு உடனடியாக நாம் வீட்டில் செய்யும் மருத்தவ குறிப்புகள் தொடர்பாக தொடர்ந்து தெரிந்துக் கொள்வோம்.
1. நெஞ்சில் ஏற்படும் சளி அடைப்பு பிரச்சினை
குழந்தைகளுக்கு இது அதிகம் இருக்கும் ஆனால் இவர்கள் ஆங்கில மருந்துவில்லைகள் கசக்கும் என்பதால் குடிக்க மாட்டார்கள்.
இதனால் வீட்டிலிருக்கும் தேங்காய் எண்ணையில் சிறிதளவு கற்பூரம் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து அந்த எண்ணெய் ஆறியதும் நன்றாக நெஞ்சுப்பகுதியில் பூச வேண்டும். இவ்வாறு கிழமையில் மூன்று நாட்கள் செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால் சளி பிரச்சினைகள் சரியாகும்.
2. கடுமையான தலைவலி
ஒழுங்காக தூங்காமை மற்றும் தொலைதொடர்பு சாதனங்கள் பயன்பாடு போன்ற காரணங்களினால் நிறைய பேருக்கு தலைவலி ஏற்படும். இதனை கட்டுபாட்டிங்குள் கொண்டு வருவதற்கு என்ன செய்ய வேண்டும் என்றால் 10 துளசி இலை, சிறுதுண்டு சுக்கு மற்றும் 2 லவங்கம் ஆகிய மூலிகைப் பொருட்களை மைப்போல் அரைத்து நெற்றியில் பத்து போல் போட வேண்டும்.
3. தொடர் விக்கல்
சிலருக்கு சமிபாட்டுக்கு தேவையான நீர் உடம்பில் இல்லாத போது சாப்பாடு தொண்டையில் இறங்கியவுடன் விக்கல் ஏற்படும். இந்த பிரச்சினையை கவனிக்காமல் விட்டால் இறப்பு கூட ஏற்படலாம். இதற்கு நெல்லிக்காயை இடித்து அதிலுள்ள சாற்றை எடுத்து தேன் கலந்து சாப்பிட வேண்டும். இவ்வாறு செய்வதாலும் நிறைய தண்ணீர் குடிப்பதாலும் விக்கல் பிரச்சினை இல்லாமல் ஆக்கலாம்.
4. வாய் நாற்றம் அதிகரிப்பு
ஆண், பெண் என இருபாலாருக்கும் ஏற்படும் பிரச்சினைகளில் ஒன்று தான் வாய் நாற்றம். இந்த பிரச்சினை வயிற்றில் அதிகளவு புண்கள் இருப்பதாலும் அல்லது பற்களில் பிரச்சினைகள் இருப்பதாலும் ஏற்படுகிறது இதனை கட்டுபடுத்த சில என்னன்வோ எல்லாம் செய்து பார்த்திருப்பார்கள்.
ஆனாலும் சரியாகமல் இருக்கும் . இவ்வாறு இருக்கும் போது சட்டியில் படிகாரத்தை போட்டு நன்கு காய்ச்சி, அதனை நன்கு ஆற வைத்து தினமும் காலையில் குடிக்க வேண்டும். மேலும் துருநாற்றம் அதிகம் இருந்தால் மூன்று வேளைகளும் குடிக்கலாம்.
5.பித்தவெடிப்பு பிரச்சினை
சில பெண்கள் அதிகம் தண்ணீரில் இருக்கும் போது அவர்களின் பாதங்களில் பித்தவெடிப்பு பிரச்சினை இருக்கும். இந்த பிரச்சினை அதிகரிக்கும் பட்சத்தில் எழுந்து நடக்கக்கூட முடியாத நிலைமை ஏற்படும்.
இதற்கு என்ன செய்வார்கள் தெரியுமா? கண்டங்கத்திரி இலைசாறை ஆலிவு எண்ணையில் சேர்த்து நன்றாக காய்ச்சி தினமும் வெடிப்பு உள்ள பகுதிகளில் பூசி வந்தால் காலப்போக்கில் பித்த வெடிப்பு பிரச்சினை சரியாகும்.