பிரித்தானியா நோக்கி கடலில் பயணித்த 53 அகதிகள் மீட்பு!
24 Jan,2023
பா து கலே கடற்பிராந்தியம் வழியாக பிரித்தானியா நோக்கி படகில் பயணித்த 53 அகதிகளை கடற்படையினர் மீட்டுள்ளனர்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு Boulogne-sur-Mer துறைமுகம் வழியாக அவர்கள் பயணித்துள்ளனர். சிறிய மீன்பிடி படகில் பெண்கள் குழந்தைகள் உள்ளிட்ட 53 அகதிகள் பயணித்துள்ளனர். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் அவர்கள் பயணித்த நிலையில், கடற்படை அதிகாரிகள் அவர்களை மீட்டு மீண்டும் Boulogne-sur-Mer துறைமுகத்துக்கு அழைத்து வந்தனர்.
ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த அகதிகளே இவ்வாறு படகில் பயணித்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.