17 வயது மாணவியை 1 லட்சத்திற்கு வாங்கி திருட்டு திருமணம் செய்த முதியவர்!
22 Jan,2023
மும்பை விக்ரோலி பார்க்சைட் பகுதியை சேர்ந்த 17 வயது மாணவியை 1 லட்சத்திற்கு வாங்கி திருமணம் செய்த 50 வயது நபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். மும்பையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு விக்ரோலி பார்க்சைட் பகுதியைச் சேர்ந்த 17 வயது மாணவி கல்லூரிக்குச் சென்று விட்டு வீடு திரும்பவில்லை என்று அவரது தாயார் பொலிஸில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் அடிப்படையில் தேடுதல் வேட்டை நடத்திய பொலிஸார், மாணவியின் செல்போன் சிக்னல் கடைசியாக விடுப்பட்ட தாதர் ரயில் நிலையத்தின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது அந்த மாணவி தம்பதி ஒருவருடன் ஹூப்ளிக்கு செல்லும் ரயிலில் ஏறிச் சென்றது தெரியவந்தது.
பின் விசாரணையை தீவிரப்படுத்திய பொலிஸார், தம்பதி இருவரும் மீரஜ் ரயில் நிலையத்தில் இறங்கியதும், அங்கிருந்து இரு சக்கர வாகனம் ஒன்றில் கிளம்பிச் சென்றதையும் கண்டுபிடித்தனர்.
அந்த இரு சக்கர வாகனத்தின் பதிவு எண்ணை வைத்து பொலிஸார் நடத்திய விசாரணையில், மாணவியுடன் சென்ற பெண் சுதா மனோஜ் ஜோஷி என்பவரின் மனைவி மற்றும் மாமா என்பது உறுதி செய்யப்பட்டது.
இருவரையும் தீவிரமாக கண்காணித்த பொலிஸாருக்கு, இறுதியாக அவுரங்காபாத்தில் உள்ள சிந்தி காலனியில் அவர்கள் பதுங்கி இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து பொலிஸார் நடத்திய அதிரடி சோதனையில், மாணவி மீட்கப்பட்டதோடு ஆள் கடத்தலில் ஈடுபட்ட இருவரையும் பொலிஸார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இருவரிடமும் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், கடத்தப்பட்ட 17 வயது பெண் அவுரங்காபாத்தை சேர்ந்த கண்பத் காம்ப்ளே (50 வயது) என்பவருக்கு ஒரு லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்தது தெரியவந்தது.
மேலும் கண்பத் காம்ப்ளே-யும் அந்த பெண்ணை கோயில் ஒன்றில் வைத்து திருமணம் செய்துகொண்டார்.
மாணவி மைனர் என்று தெரிந்தும் திருமணம் செய்து கொண்டதால் அவர் மீதும், கடத்தலில் ஈடுபட்ட இருவர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர்.