மரத்தின் உச்சிக்கிளைக்குச் சென்ற நாய். இறங்க முடியாமல் தவித்த சுவாரஸ்யம்!
21 Jan,2023
மரத்தில் சிக்கிக்கொண்ட நாய்மரத்தில் சிக்கிக்கொண்ட நாய்
வீட்டில் வளர்க்கப்படும் நாய் ஒன்று அணிலை துரத்த மரத்தில் ஏறி அதன் உச்சியில் மாட்டிக்கொண்ட சுவாரசிய சம்பவம் அமெரிக்காவில் நிகழ்ந்துள்ளது.
அமெரிக்காவின் இதாஹோ மாகாணத்தில் உள்ள கால்டுவெல் என்ற பகுதியில் வசிப்பவர் கிரிஸ்டாயான டேனேர். இவர் தனது வீட்டில் இஸ்ஸி(Izzy) என்ற நாயை செல்லப் பிராணியாக வளர்த்து வருகிறார். இந்த செல்லப் பிராணி செய்த சேட்டையான காரியம் அதை ஒரே நாளில் உலக பேமஸ் ஆக்கியுள்ளது.
இந்த நாய்குட்டி வசிக்கும் இடத்திற்கு ஒரு அணில் குட்டி அடிக்கடி ஓடி விளையாடி தொந்தரவு செய்துள்ளது. இதை பார்த்து பார்த்து பொறுக்க முடியாக செல்ல நாய் இஸ்ஸி, ஒரு கை பார்த்து விடுகிறேன் என அணிலை துரத்த தொடங்கியுள்ளது. அந்த அணில் நாயை போக்கு காட்டி மரத்தில் ஏறி ஓடத் தொடங்கியது. செல்ல நாய் இஸ்ஸியும் ஆகட்டும் பார்க்கலாம் என மரத்தில் ஏறி துரத்தத் தொடங்கியது.
மரத்தின் உச்சிக்கு சென்று அணில் எஸ்கேப் ஆன நிலையில், உச்சிக்கு எறிய நாய்குட்டிக்கு கீழே இறங்கத் தெரியவில்லை. மரத்தில் உச்சிக்கிளையின் மீது பீதியுடன் அமர்ந்துகொண்டு தனது உரிமையாளருக்கு கூக்குரல் கொடுத்துள்ளது இஸ்ஸி. தனது செல்லப் பிராணியின் சேட்டையான செயலை பார்த்து சிரிப்பதா கோபப்படுவதா என்று தெரியாமல் பதறிப்போன உரிமையாளர் கிறிஸ்டியான தீயணைப்பு துறையினரை தொடர்பு கொண்டுள்ளார்.
கிறிஸ்டியானா வீட்டிற்கு விரைந்த தீயணைப்பு துறையினர், ராட்ச ஏணியின் உதவியுடன் இஸ்ஸி நாயை மீட்டனர். நாயின் இந்த செயலை புகைப்படம் எடுத்து அப்பகுதியினர் பேஸ்புக்கில் பகிர்ந்த நிலையில்,இது சமூக வலைத்தளத்தில் வைராலாகத் தொடங்கியது. இதன் சேட்டையான செயலை படித்து பலரும் ஜாலியான கமெண்டுகளை பகிர்ந்து வருகின்றனர்.