சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்திய பூசாரிஸதந்தையும் உடந்தை!!
17 Jan,2023
தொம்பே பொலிஸ் பிரிவில் வசிக்கும் நபர் தனது 12 வயதுடைய மகளுக்கு ஏற்ப்பட்டுள்ள கிரக தோஷத்தினை நீக்குவதற்காகப் பூசாரி ஒருவரிடம் அழைத்துச் சென்றுள்ளார் அவருடைய தந்தை, இதனையடுத்து தோஷத்தினை நீக்குவதாகக் கூறி சிறுமியை மாத்திரம் ஆலயத்தினுள் அழைத்துச் சென்ற பூசாரி சுமார் ஒரு மணிநேரம் சிறுமியை மூன்று முறை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார், இதனையடுத்து சிறுமி தந்தையிடம் தெரிவித்தார் ஆனால் தந்தை பெரிதாக இதனை கவனத்தில் கொள்ளவில்லை.
இதனையடுத்து தனக்கு நடந்த கொடுமையினை தனது தாயிடம் தெரிவிக்க, உடனடியாக அவர் சிறுவர் பாதுகாப்பு அதிகாரியிடம் முறையிட்டதற்கிணங்க குறித்த பூசாரியும், சிறுமியின் தந்தையும் அதிரடியாகக் கைது செய்யப்பட்டு விசாரணையினை முன்னெடுத்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.