இரத்த வெள்ளத்தில் கிடந்த கர்ப்பிணி பெண்!
12 Jan,2023
அமெரிக்காவின் மின்னசோட்டா மாகாணத்தில் உள்ள அமேசான் விற்பனை நிலையத்திற்கு சொந்தமான கார் தரிப்பிடத்தில் மிக நீண்ட நேரமாகக் கார் ஒன்று தரித்து நின்றுள்ளது, இதனையடுத்து சந்தேகப்பட்ட அமேசான் ஊழியர்கள்குறித்த காரினை சோதனை செய்தபோது காரினுல் ஒரு பெண் இரத்த வெள்ளத்தில் உயிருக்காகப் போராடிக் கொன்டு இருப்பதைக் கண்டு உடணடியாக அவரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து சிகிச்சை பலனின்றி குறித்த பெண் உயிரிழந்ததாகவும், குழந்தையினை வெளியில் எடுத்ததாகவும் வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது, இதனையடுத்து விசாரணையினை மேற்கொன்ட பொலிஸார் குறித்த கொலையினை மேற்கொன்டவர் அமேசான் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் என அடையாளங் கண்டு அவரை கைது செய்துள்ளனர்.