சிறுமியை கடத்தி லாட்ஜில் அடைத்து வைத்து கூட்டு பலாத்காரம் செய்த - 6 பேர் கைது
29 Dec,2022
வீடியோவை காட்டி மிரட்டி கடந்த ஜூன் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை பலமுறை சிறுமியை பலாத்காரம் செய்துள்ளனர். நாளுக்கு நாள் தொல்லை அதிகரித்ததை அடுத்து பாதிக்கப்பட்ட சிறுமி நடந்த சம்பவம் குறித்து தனது பெற்றோரிடம் கூறி உள்ளார். புனே:
மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரை சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவரை அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் சம்பவத்தன்று கத்தியை காட்டி மிரட்டி கடத்தி சென்றுள்ளார். பின்னர் அங்குள்ள லாட்ஜ் ஒன்றில் அடைத்து வைத்து சிறுமியை கற்பழித்தார். அவருடன் மேலும் 5 பேர் சேர்ந்து சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். அதோடு, இந்த சம்பவத்தை செல்போனில் வீடியோவாக பதிவு செய்த கும்பல், சிறுமியிடம் அதை காட்டி நடந்த சம்பவத்தை யாரிடமாவது கூறினால் வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்து விடுவோம் என மிரட்டி உள்ளனர்.
மேலும் வீடியோவை காட்டி மிரட்டி கடந்த ஜூன் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை பலமுறை சிறுமியை பலாத்காரம் செய்துள்ளனர். நாளுக்கு நாள் அவர்களின் தொல்லை அதிகரித்ததை அடுத்து பாதிக்கப்பட்ட சிறுமி நடந்த சம்பவம் குறித்து தனது பெற்றோரிடம் கூறி உள்ளார். அதை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாய் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்ட 6 பேரையும் போலீசார் கைது செய்தனர்.