பெண்கள் முன்னெடுத்து தொடங்குவதையே ஆண்கள் விரும்புகிறார்கள் : ஆய்வில் தகவல்
26 Dec,2022
எப்போதுமே, முத்தம் கொடுப்பதன் மூலமாக, அணைப்பதன் மூலமாக, பாலியல் உறவில் ஈடுபட இருப்பதை ஆண்கள் தான் விருப்பத்தை முதலில் தெரிவிக்கிறார்கள். பெண்கள் வெட்கப்பட்டு, தயக்கமாக இருந்த காலம் எல்லாம் போய்விட்டது.
பெண்கள் இதையெல்லாம் செய்தால் ஆண்களுக்கு பிடிக்கும் என்று பெரிய பட்டியலே இருக்கிறது. பாலியல் உறவைப் பொறுத்தவரை தற்போது வரை பல விதமான கேள்விகளும் சந்தேகங்களும் உள்ளன. குறிப்பாக, தன்னுடைய பார்ட்னரின் விருப்பு வெறுப்புகள் தெரிந்து வைத்துக் கொள்வது அவசியம். பாலியல் உறவில், ஆண்கள் தன்னுடைய பார்த்னரே, பாலியல் உறவை தொடங்க வேண்டும், அவர்களின் விருப்பத்தை முதலில் வெளிப்படுத்தா வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.
எப்போதுமே, முத்தம் கொடுப்பதன் மூலமாக, அணைப்பதன் மூலமாக, பாலியல் உறவில் ஈடுபட இருப்பதை ஆண்கள் தான் விருப்பத்தை முதலில் தெரிவிக்கிறார்கள். பெண்கள் வெட்கப்பட்டு, தயக்கமாக இருந்த காலம் எல்லாம் போய்விட்டது. எப்போதுமே லேடீஸ் ஃபர்ஸ்ட் என்று சொல்வதைப் போல, பாலியல் விருப்பத்தையும் பெண்களிடம் இருந்து முதல் ‘மூவ்’ இருக்க வேண்டும் என்பதை பெரும்பாலான ஆண்கள் விரும்புகிறார்கள். இதனால், வழக்கத்தை விட தம்பதிகளின் நெருக்கம் மற்றும் செக்ஷுவல் லைஃப் ஆக்டிவாக இருப்பதாகவும் சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
ஆய்வின் முடிவுகள்
நார்வேஜியன் அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைகழகத்தின் ஆய்வாளர்கள், இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளனர். 18 வயது முதல் 30 வயது வரை, 92 ஜோடிகள் ஆய்வில் பங்கேற்றனர். இந்த ஜோடிகள் குறைந்தபட்சமாக ஒரு மாதம் முதல் அதிகமாக ஒன்பது ஆண்டுகள் வரை ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர். மேலும், இந்த ஜோடிகள் வாரத்தில் இரண்டு முதல் மூன்று நாட்களாவது செக்ஸ் வைத்துக் கொள்கிறார்கள். பல்வேறு தரவுகளின் அடிப்படையில், இந்த ஜோடிகளில், பெண்கள் பாலியல் உறவை இனிஷியேட் செய்தால், பாலியல் உறவில் அதிகமாக ஈடுபடுகிறார்கள் என்பது தெரியவந்துள்ளது.