இத்தனை கால் இருக்கே? கடலில் இருந்து வெளிவந்த ,உயிரினமா? ,.
16 Dec,2022
தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த 62 வயதான ஜான் வோர்ஸ்டர் என்பவர், தனது வீட்டுக்கு அருகே உள்ள ஸ்டில் பெ கடற்கரையோரங்களில் காலை மாற்றும் மாலையில் ஒரு குறிப்பிட்ட பொருளை படம் பிடித்து இணையத்தில் பகிர்ந்துள்ளார்.
அந்த படத்தில் இருந்த உருவம் பார்ப்பதற்கு வினோதமாக இருந்ததால் அதை இணையவாசிகள் வேற்றுகிரக உயிரினம் ஏதோ கடலில் இருந்து கரை ஒதுங்குயுள்ளது என்று நினைத்து பீதியடைந்துள்ளனர். தென்னாபிரிக்க கடலில் இருந்து வேற்றுகிரக வாசிகள் வெளிவருவதாக அந்த படத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.
ஆனால் ஜான் வோர்ஸ்டர் எடுத்ததோ கடலில் இருந்து கரை ஒதுங்கிய இறந்த கற்றாழை செடிகளைத்தான். அதை அவர் ஒரு ரசனைக்காக, வித்தியாசமான பட அமைப்பிற்காக காலையிலும் மாலையும் மங்கும் வெளிச்சத்தில் எடுத்துள்ளார். அந்த ஒளியில் கவிழ்ந்து கிடந்த காற்றாலை செடி ராட்சச சிலந்தி போலவும், வேற்றுகிரகவாசி போலவும் இருந்துள்ளது.
சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்டுள்ள சேதம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த முதன்மை நோக்கம் கொண்டு ஜான் வோர்ஸ்டர் ஃபேஸ்புக்கில் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். ஆனால் காரணம் மாறி வைரலான இந்த படங்கள் கடற்கரைக்கு செல்வோர் மத்தியில் பெரும் பீதியைக் கிளப்பியது. பின்னர் அவரே இது வேற்றுகிரகவாசிகள் இல்லை. வெறும் கற்றாழை செடிகளே என்று விளக்கம் தந்துள்ளார்