ஓர் எச்சரிக்கை பதிவு!உங்கள் மிக்ஸி ஜார் வெடிக்கும் அபாயம்
10 Dec,2022
சமையலறையில் நாம் பயன்படுத்துவது பொதுவான உபகரணம் மிக்ஸி. இதன் பயன்பாடு நாளுக்கு நாள் எல்லா நாடுகளிலும் அதிகரித்து கொண்டே போகின்றது. சமையலறையில் ஓர் அங்கமாகவே மிக்ஸி மாறிவிட்டது. எனினும், சில பொருட்களை மிக்ஸியில் அரைக்க கூடாது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
முழு மசாலாப் பொருட்கள்
வீட்டில் நாம் அரைத்து பயன்படுத்தும் மசாலாவில் சுவை அதிகமாக இருக்கும். இதற்காக முழு மசாலாக்களை அப்படியே மிக்ஸியில் போட்டு அரைக்க கூடாது.
மிக்ஸி பழுதாகிவிடும், எனவே அதை கொஞ்சமேனும் கையில் இடித்து பின் மிக்ஸியில் அரைத்து பயன்படுத்தலாம்.
காபி கொட்டைகள்
சிலர் சுத்தமான மற்றும் சுவையான காபியை குடிக்க வீட்டில் காபி கொட்டைகளை தூள் செய்கிறார்கள். ஆனால் காபி கொட்டைகளை தூள் செய்ய மிக்ஸியைப் பயன்படுத்த வேண்டாம்.
குளிர் பொருட்கள்
ஜூஸ் தயாரிக்கும் போது சிலர் ஐஸ் கட்டிகளை முழுதாக மிக்ஸியில் போடுவார்கள். இதன் காரணமாக மிக்ஸியின் பிளேடுகள் மற்றும் கொள்கலன் சேதமடையலாம்.
சூடான பொருட்கள்
எம்மில் சிலர் சூடான பொருட்களையும் மிக்ஸியில் போட்டு அரைக்க ஆரம்பிக்கிறார்கள். சூடான பொருள் தரும் அழுத்தத்தால் உங்கள் மிக்ஸி ஜார் வெடிக்கும் அபாயம் உள்ளது. எனவே எச்சரிக்கையாக இருங்கள்.