சனி பகவானை மகிழ்விப்பது எப்படி? எப்படிப்பட்ட வேலைகளை செய்யக்கூடாது? எந்த வகையான வழக்கத்தைப் பின்பற்ற வேண்டும்?
சனி மிக மெதுவாக நகரும் கிரகமாவார்.
அவர் ஒரு ராசியை கடக்க இரண்டரை ஆண்டுகள் எடுத்துக்கொள்கிறார்.
தற்போது மிதுனம், துலாம் ராசிக்காரர்கள் ஏழரை நாட்டு சனியின் தாக்கத்தில் உள்ளார்கள்.
சனிப்பெயர்ச்சி 2023: இந்த ராசிகள் மீது சனியின் நேரடி தாக்கம், இப்படி நிவாரணம் பெறலாம்
2023 சனி பெயர்ச்சி: மனிதர்கள் செய்யும் செயல்களுக்கு ஏற்ப அவர்களுக்கு பலன்களை அளிக்கும் சனி பகவான் நீதிக்கடவுள் என அழைக்கப்படுகிறார். தற்போது மகர ராசியில் இருக்கும் அவர் ஜனவரி 17 ஆம் தேதி தனது இரண்டாவது ராசியான கும்பத்திற்கு பெயர்ச்சியாகிறார். அங்கு அவர் ஜனவரி 29, 2025 வரை, அதாவது சுமார் இரண்டரை ஆண்டுகள் தங்குவார். சனி மிக மெதுவாக நகரும் கிரகமாவார். அவர் ஒரு ராசியை கடக்க இரண்டரை ஆண்டுகள் எடுத்துக்கொள்கிறார்.
தற்போது மிதுனம், துலாம் ராசிக்காரர்கள் ஏழரை நாட்டு சனியின் தாக்கத்தில் உள்ளார்கள். இது ஜனவரி மாதம் சனி பெயர்ச்சியானவுடன் முடிந்துவிடும். கும்ப ராசிக்குள் நுழைந்தவுடன், சனி பகவான், கடகம் மற்றும் விருச்சிக ராசிக்காரர்களின் செயல்கள் மீது கவனத்தை செலுத்துவார். இந்த வேளையில், இந்த ராசிக்காரர்களை அவர் அவ்வப்போது சோதிப்பார். இப்படிப்பட்ட நிலையில், சனி பகவானை மகிழ்விப்பது எப்படி? எப்படிப்பட்ட வேலைகளை செய்யக்கூடாது? எந்த வகையான வழக்கத்தைப் பின்பற்ற வேண்டும்? இந்த கேள்விகளுக்கான விளக்கங்களை இந்த பதிவில் காணலாம்.
ஏழரை நாட்டு சனி என்றால் என்ன?
ஏழரை நாட்டு சனி என்பது ஒவ்வொருவரின் வாழ்விலும் குறைந்தது மூன்று முறை வரக்கூடிய ஒரு நிகழ்வாகும். முதல் முறை மங்கு சனி என்றும், இரண்டாம் முறை பொங்கு சனி என்றும், மூன்றாம் முறை மரண சனி என்றும் இது அழைக்கப்படுகிறது. சனி பகவான் ஒவ்வொரு இராசியிலும் இரண்டரை ஆண்டுகள் வாசம் செய்வார். நமது இராசிக்கு முந்தைய இராசியில் சனி வரும்போது, நமக்கும் ஏழரை ஆண்டு கால நிகழ்வு துவங்கும். முந்தைய இராசியில் இரண்டரை வருடம், நமது ஜென்ம இராசியில் இரண்டரை வருடம், நமது இராசிக்கு அடுத்த இராசியில் இரண்டரை வருடம் என மொத்தமாக ஏழரை ஆண்டுகாலம் அதன் தாக்கம் நமக்கு இருக்கும். இந்த ஏழரை ஆண்டு காலம் விரைய சனி (முதல் கட்டம்), ஜென்ம சனி (இரண்டாம் கட்டம்) மற்றும் பாத சனி (மூன்றாம் கட்டம்) என மூன்று கட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
கடகம் மற்றும் விருச்சிக ராசிக்காரர்கள் இந்த விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும்
- இந்த காலத்தில் தான் என்ற அகங்காரத்தை முற்றிலுமாக தவிர்த்துவிட வேண்டும். இது பரஸ்பர உறவுகளில் விரிசலை ஏற்படுத்தும். நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடைய கடின உழைப்பை கைவிடாதீர்கள். கடினமாக உழைத்த பின்னரே நீங்கள் விரும்பிய பலனைப் பெறுவீர்கள்.