வியர்வை நாற்றத்தால் கடும் அவதியா?
07 Dec,2022
பொதுவாக வேலைக்கு செல்லும் ஆண், பெண்கள் என இருபாலருக்கும் வியர்வை பிரச்சினை இருக்கும். இதனை சரிசெய்வதற்கு சிலர் அடிக்கடி குளிப்பார்கள் அல்லது வாசனை திரவியங்கள் பூசுவார்கள். வியர்வை பிரச்சினையுள்ளவர்கள் வெளியில் செல்லக் கூச்சம், நண்பர்களிடம் சகஜமாக பழக முடியாது மற்றும் மற்றவர்களுடன் நெருக்கமாக இருக்க முடியாது இது போன்று பல பிரச்சினைகள் இருக்கிறது.
இந்த பிரச்சினையை, வியர்வையை குறைக்கும் உணவுகள் உட்கொள்ளல், முறையாக வைத்திய ஆலோசனை எடுத்தல் போன்ற பராமரிப்பு முறைகளை கையாளுவதால் கட்டுபடுத்த முடியும்.
அந்த வகையில் வியர்வை எவ்வாறு கட்டுபடுத்தலாம் என்பது குறித்து தெரிந்துக் கொள்வோம்.
வியர்வையை கட்டுபடுத்தும் வழிமுறைகள்
மஞ்சள் துண்டுகளை கல்லில் உரசி, குளிர்க்கும் போது வியர்வை அதிகமாக இருக்கும் இடங்களுக்கு தடவினால் கிருமிகளின் தாக்கம் குறையும். இவ்வாறு செய்வதால் வியர்வை பிரச்சினை கட்டுபடுத்தப்படும்.
குளிர்க்கும் போது தக்காளியை ஒரு பக்கட் தண்ணீரில் கலந்து குளித்தால் வியர்வை பிரச்சினை காலப்போக்கில் குணமாகும். இதனை பெண்கள் பயன்படுத்துவது சிறந்தது.
தினமும் சாப்பிடும் போது வெங்காயத்தை உணவில் குறைவாக சேர்க்க வேண்டும்.ஏனென்றால் வெங்காயம் உடலிலுள்ள வியர்வையை அதிகப்படுத்தும்.
கற்றாழை மற்றும் எலுமிச்சைப்பழத்தை நீரில் கலந்து அதிக வியர்வை பிரச்சினையுள்ள இடங்களுக்கு தடவி சிறிது நேரத்திற்கு பின்னர் கழுவ வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் வியர்வை பிரச்சினை முற்றாக நீங்கும்.
வேலைக்கு செல்லும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இருவரும் எமது ஆடைகள் மூலமும் வியர்வையை கட்டுபடுத்த முடியும். இதன்படி, கொட்டூன் ஆடைகளை அணிவது சிறந்தது.