குழந்தையை கொன்றுவிட்டு இன்ஸ்டாவில் ஐடியா கேட்ட இளைஞர் கைது!
02 Dec,2022
இன்ஸ்டாவில் ஐடியா கேட்ட கொலையாளிஇன்ஸ்டாவில் ஐடியா கேட்ட கொலையாளி
தனது வீட்டில் கொலைக்கான தடயங்களை அழித்துவிட்டு ஜோஷ்வா தப்பிக்க முயன்ற போது அவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
அமெரிக்காவில் இளைஞர் ஒருவர் பெண் குழந்தையை சுட்டுக்கொன்று அதை இன்ஸ்டாகிராம் ஒப்புதல் வாக்குமூலமாக கொடுத்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.
அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் உள்ள பென்சலேம் என்ற பகுதியைச் சேர்ந்த 16 வயது இளைஞர் ஜோஷ்வா கூப்பர். ஜோஷ்வா கூப்பர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து தனது பெண் தோழிக்கு மெசேஜ் அனுப்பியுள்ளார். அந்த மெசேஜை பார்த்த அந்த பெண் அதிர்ச்சி அடைந்தார்.
காரணம், ஜோஷ்வா தான் ஒருவரை கொலை செய்துவிட்டேன். இந்த உடலை எப்படி டிஸ்போஸ் செய்ய வேண்டும் என ஐடியா கொடு என்று கேட்டுள்ளார். அந்த வீடியோவில் ரத்தம் வெள்ளத்தில் உயிரிழந்தவரின் கைகள், கால்கள் தென்பட்டுள்ளன. இந்த மெசேஜை பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த பெண் பெற்றோரிடம் இதை தெரிவிக்க, பெற்றோர் அமெரிக்காவின் காவல்துறையை தொலைப்பேசியில் அழைத்து புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் காவல்துறை கொலையாளி ஜோஷ்வாவின் வீட்டை கண்டுபிடித்து அங்கு சென்றபோது அவரின் பாத்ரூமில் உயிரிழந்தவரின் உடல் இருந்துள்ளது.
உயிரிழந்தவர் துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளார். அந்த தடயங்களை அழித்துவிட்டு ஜோஷ்வா தப்பிக்க முயன்றபோது அவரை காவல்துறையினர் கைது செய்தனர். உயிரிழந்தவரின் அடையாளத்தை காவல்துறை வெளியிடவில்லை. அவர் பெண் என்றும், 18 வயதுக்கு குறைவான சிறார் என்ற தகவலை மட்டும் காவல்துறை பகிர்ந்துள்ளது.
இந்நிலையில், ஜோஷ்வாவை கைது செய்த காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது. அவரின் கொலை செயலுக்கு பிணை தர முடியாது என்ற நீதிமன்றம் சிறார் சிறையில் அடைக்க உத்தரவிட்டது.