குடிபோதையில் இருந்த யுவதியை பாலியல் பலாத்காரம் செய்த டாக்ஸி ரைவர்!
                  
                     02 Dec,2022
                  
                  
                      
					  
                     
						
	 
	 
	இந்தியாவின் பெங்களுர் பொலிஸ் எல்லையில் வசித்துவந்த 22 வயது சுமதி என்பவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகின்றார். இவர் நேற்று தனது நிறுவனத்தில் வேலை முடிந்தவுடன் தனது ஊழியர்களுடன் பாட்டி ஒன்றில் கலந்து கொன்டார். இதன்பொது குறித்த யுவதி சற்று அதிகமாக மது அருந்தியதன் காரணமாக அதிக போதையில் வீடு செல்ல முடியாது டாக்ஸி ஒன்றை வரவழைத்தார்.
	 
	இதனையடுத்து, குறித்த டாக்ஸியில் ஏறி வீடு நோக்கிச் சென்றார், இந்நிலையில் குறித்த யுவதி போதையில் இருப்பதை அறிந்த ரைவர் அவரிடம் சிகரெட் கெட்டுள்ளார் இந்நிலையில் தன்னிடம் இல்லை ஒரு கடையில் நிறுத்தி தனக்கும் வாங்கித் தருமாறு கேட்டுள்ளார். இதற்கமைய சிகரெட்டை யுவதியிடம் கொடுத்து அவருக்கு மேலும் போதையினை அதிகரித்தார், இதன்போது போதையில் இருந்த யுவதியை தனது வீட்டுக்கு கொன்டுசென்று பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு அவரை மிரட்டி வீட்டுக்கு அனுப்பினார். அதன்பின்னர் அதிக இரத்த போக்கு காரணமாக தனியார் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட யுவதி தனக்கு நடந்த கொடுமையினை வைத்தியரிடம் தெரிவித்தார். இதனையடுத்து குறித்த ரைவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.