ஜப்பானியரான கொலை குற்றவாளி, மருத்துவ காரணங்களால் கடைசி வரையில் சிறை தண்டனையில் இருந்து தப்பிய நபர், தற்போது வயது மூப்பு மற்றும் நோய் காரணமாக மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கல்லூரி தோழியுடன் இரவு விருந்து
ஜப்பானியரான இஸ்ஸெய் சகாவா என்பவரே கொலை வழக்கில் சிக்கி, இறுதி வரையில் சிறை தண்டனை அனுபவிக்காமல் தமது 73வது வயதில் மரணமடைந்தவர்.
இவரது இறுதிச்சடங்குகளுக்கு பொதுமக்கள் எவரும் பங்கேற்கவில்லை எனவும், குறிப்பிட்ட சில உறவினர்களும் நண்பர்களும் மட்டுமே கலந்துகொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், தமது குடியிருப்பில் வைத்து ரெனீ ஹார்ட்வெல்ட்டின் கழுத்தில் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துள்ளார். பின்னர் சடலத்துடன் உறவு கொண்ட சகாவா, அவரது உடல் பாகங்களை பல நாட்களாக சமைத்து சாப்பிட்டுள்ளார்.
பிரான்ஸ் பொலிசாரால் கைது
எஞ்சிய பாகங்களை பூங்கா ஒன்றில் மறைவு செய்த நிலையில், பல நாட்களுக்கு பின்னர் பிரான்ஸ் பொலிசாரால் கைது செய்யப்பட்டார். அத்துடன், தமது குற்றத்தை அவர் பொலிசாரிடம் ஒப்புக்கொண்டுள்ளார்.
ஆனால், 1983ல் பிரான்ஸ் மருத்துவ நிபுணர்கள் இவரை சோதனை செய்துவிட்டு, விசாரணையை எதிர்கொள்ளும் உளவியல் தகுதி இவருக்கு இல்லை என நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
மேலும், உளவியல் மருத்துவமனை ஒன்றில், சிகிச்சைக்கும் பரிந்துரைத்துள்ளனர். 1984ல் சகாவா ஜப்பானுக்கு நாடுகடத்தப்படும் வரையில் குறித்த மருத்துவமனையில் இருந்துள்ளார்.
கொலை தொடர்பில் விரிவான புத்தகம்
இதனிடையே ஜப்பானுக்கு திரும்பிய சகாவா மருத்துவ சோதனைக்கு உட்படுத்தப்பட்டு, பின்னர் உளவியல் காப்பகத்தில் அனுமதிக்க தேவையில்லை என நிபுணர்கள் தரப்பால் கூறப்பட்டது.
அதன் பின்னர், தமது குற்றச்செயலை வெளியிட்டு, அதில் பணம் ஈட்டும் நடவடிக்கையில் இறங்கினார் சகாவா. தமது கொலை தொடர்பில் விரிவான புத்தகம் ஒன்றை வெளியிட்டதுடன், ஜப்பானில் நட்சத்திர அந்தஸ்த்தையும் பெற்றார்.
சகாவா தனது இறுதி நாட்களில் சகோதரர் ஒருவருடன் வாழ்ந்து வந்துள்ளார். வயதான காலத்தில் கூட, தாம் செய்த கொலை தொடர்பில் அவருக்கு எந்த குற்ற உணர்ச்சியும் இருந்ததில்லை என்றே கூறப்படுகிறது.