திருமணத்துக்கு முன்பு தம்பதியராக போகும் ஆணும் பெண்ணும் சில பரிசோதனைகள் செய்து கொள்வது அவசியம் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். குறிப்பாக பாலியல் உறவில் ஏதேனும் குறைபாடை கண்டறிய சில பரிசோதனைகள் அவசியமே. அது குறித்து தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம்.
ஹைலைட்ஸ்:
திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்க இந்த பரிசோதனைகள் அவசியம்.
பாலியல் மருத்துவரை சந்தித்து premarital health check up பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.
கேள்வி கேட்கும் வாசகர்களின் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு கருதி, அவர்களது பெயர், ஊர் போன்ற தனிப்பட்ட தகவல்கள் பகிரப்படமாட்டாது.
உங்கள் குழந்தைகள் அறை, பள்ளி மற்றும் பொழுதுபோக்குகளுக்கு தேவையான அனைத்தும் கிட்ஸ் கார்னிவல் ஸ்டோரில் வாங்கலாம்
ஐய்யா எனக்கு வயது 27 .. இன்னும் 5 மாதம் கழித்து எனது காதலியை திருமணம் செய்து கொள்ள போகிறேன்... நாங்கள் 2 முறை உடலுறவு கொண்டோம். அப்போது எனக்கு 2 நிமிடங்களுக்குள் விந்து வெளியேறி விட்டது. எனினும் நான் பதட்டம் , பயம் , காரணத்தால் விரைவில் வந்துவிட்டது என்று சமாதானம் செய்தேன்.
ஆனால் நான் சுய இன்பம் செய்யும் போது விந்து வெளிப்பட சற்று அதிக நேரம் எடுத்து கொள்கிறது..ஆனால் ஏன் உடலுறவின் போது மட்டும் உடனே வெளியேறி விடுகிறது. திருமணத்திற்கு பின்பு இந்த பிரச்சனை எங்கள் காதல் வாழ்க்கையை பாதிக்க கூடாது என்று நினைக்கிறேன். எனக்கு வழி இருந்தால் சொல்லுங்களேன். நான் என்ன செய்வது?
விந்து வெளியேறும் நிலை
திருமணத்துக்கு பிறகும் இப்படிதான் இருக்கும் என்று சொல்லிவிட முடியாது. பெண்ணுடன் உறவு கொள்ளும் ஆர்வத்தால் திடீரென்று இந்த நிலை உண்டாகலாம். எனினும் நீங்களாக ஏதேனும் ஒன்றை நினைத்து குழப்பி கொள்ள வேண்டாம்.
முதலில் பாலியல் மருத்துவரை சந்தித்து premarital health check up பரிசோதனை செய்து கொள்ளுங்கள். அதில் இரத்த நாளங்கள் குறைபாடு, ஹார்மோன் குறைபாடு, நரம்புகள் குறைபாடு, மன அழுத்தம், பதட்டம், ஆண் உறுப்பில் பிரச்சனை போன்ற எதுவாக இருந்தாலும் அதில் தெரிந்துவிடும். அதோடு premature ejaculation முன்கூட்டிய விந்து வெளியேற்றம் இருந்தாலும் அவை தெரிந்துவிடும்.
அடுத்தது வேறு ஏதாவது காரணங்கள் இருந்தாலும் அதை சரி செய்ய முயற்சிக்கலாம். சுய இன்பம் செய்வது தான் திருமணத்துக்கு பிறகும் நடக்கும் என்று நினைக்க வேண்டாம். திருமணத்துக்கு பிறகு மாறலாம். திருமணத்துக்கு எவ்வளவோ செலவு செய்கிறோம். ஆனால் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்க இந்த பரிசோதனைகள் அவசியம். இது உங்களுக்கு மட்டும் அல்ல . திருமணம் செய்து கொள்ள போகும் இளைய தலைமுறையினர் அனைவருக்கும் பொருந்தும். வாழ்த்துக்கள்!
பதில்
டாக்டர். T.K. K.ராஜ், MBBS.