அமெரிக்காவை உறைய வைத்த பனிப்பொழிவு! – அவசரநிலை பிரகடனம்!
23 Nov,2022
அமெரிக்காவில் பனிப்பொழிவு வழக்கத்தை விட அதிகரித்துள்ள நிலையில் சில மாகாணங்களில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் குளிர்காலம் தொடங்கியுள்ள நிலையில் பல இடங்களில் பனிப்பொழிவு தொடங்கியுள்ளது. பனிக்காலத்தின் தொடக்கத்திலேயே அதிகமான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
முக்கியமாக நியூயார்க் நகரம் பனிப்பொழிவால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. எரி நகரில் 24 மணி நேரத்திற்குள் 180 செ.மீ அளவுக்கு பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதால் வீடுகள், வாகனங்கள் பனிக்கட்டிகளால் மூடப்பட்டுள்ளது. சாலைகளில் குவிந்துள்ள பனியை அகற்றும் பணிகள் நடந்து வரும் நிலையில் நியூயார்க்கில் அவசரநிலையை அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார். மீட்பு பணிகளும், நிவாரண பணிகளும் முழு வேகத்தில் நடந்து வருகிறது.