கத்தார் பணக்கார நாடாக மாறுவதற்குக் காரணமான 3 நிகழ்வுகள் இவைதான்!

19 Nov,2022
 

 
 
அண்மைகாலம் வரை கத்தார் தலைநகர் தோஹா, நவீன தொழில்நுட்பம், வடிவமைப்பு ஆகியவற்றுக்கு நீண்ட தொலைவில் இருந்தது.
 
உலக கோப்பை கால்பந்து போட்டிகளை நடத்தத் தொடங்கி சில நாட்கள் கழிந்த நிலையில், ஏறக்குறைய சமூக அநீதி பிம்பத்தைத்தான் இப்போதைய 2022ஆம் ஆண்டு வரை கத்தார் கொண்டிருந்தது.
 
ஒரு நூற்றாண்டுக்கு முன்பு அதாவது 1922ஆம் ஆண்டில், இது ஒரு சிறிய வளைகுடா நாடாக 30 லட்சம் மக்களை கொண்டிருந்தது. 12,000 கிலோ மீட்டருக்கும் குறைவாக, யாரும் குடியிருக்க இயலாத நிலத்தை கத்தார் கொண்டிருந்தது.
 
மீனவர்கள், முத்து சேகரிப்பாளர்களைக் கொண்ட குடியிருப்புகளை அது கொண்டிருந்தது. அங்கிருந்த பெரும்பாலான குடிமக்கள், அரேபிய தீபகற்பத்தின் பரந்த பாலைவனங்களில் இருந்து நாடோடியாக வந்து குடியேறியவர்கள் ஆவர்.
 
90 வயதுக்கு மேற்பட்ட ஒரு சிலர் மட்டுமே, இன்றைக்கும் கூட 1930 மற்றும் 1940ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் நேரிட்ட மோசமான கடினமான பொருளாதாரச் சூழலை நினைவில் கொண்டிருக்கின்றனர்.
 
ஜப்பானியர்கள் முத்துகள் வளர்ப்பு பண்ணை முறையை கண்டறிந்து, பெரும் அளவு உற்பத்தி செய்தபிறகு, கத்தாரின் பொருளாதாரத்தில் சரிவு நேரிட்டது.
 
அந்த பத்து ஆண்டுகளில் கத்தார் தனது குடிமக்களில் 30 சதவிகிதம் பேரை இழந்தது. அவர்கள் வெளிநாடுகளுக்கு வாய்ப்புகளைத் தேடி குடிபெயர்ந்தனர். அதன் பின்னர் பத்து ஆண்டுகள் கழித்து 1950ஆம் ஆண்டு 24,000க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் அங்கிருந்து சென்று விட்டதாக ஐ.நா கூறியுள்ளது.
 
ஆனால், அப்போது முழுமையான சமூக மாற்றம் என்ற திசையை நோக்கிய விளிம்பில் கத்தார் பொருளாதாரம் இருந்தது.
 
கடைசியில் ஒரு அற்புதம் நேரிட்டது போல, பெரிய எண்ணெய் ஊற்றுகள் கொண்ட நாடுகளில் ஒன்றாக கத்தார் மாறியது.
 
20ஆம் நூற்றாண்டின் இரண்டாவது பகுதியில் இருந்து கத்தார் நாட்டின் கஜானா, அதி தீவிர வேகத்தில் செழுமையானது. கத்தாரின் குடிமக்கள், உலகின் செல்வ வளம் மிகுந்த குடிமக்களில் சிலராக மாறினர்.
 
இப்போது கத்தார், அதன் பெரிய வானளாவிய கட்டடங்கள், ஆடம்பரமான செயற்கை தீவுகள் மற்றும் அதி நவீன விளையாட்டு மைதானங்கள் உள்ளிட்ட பலவற்றை கொண்டதாக உள்ளது.
 
மூன்று முக்கிய மாற்றங்கள் இந்த நாட்டில் பெரிய உருமாற்றத்துக்கு வழிவகுத்தன. புவியில் மிகவும் பணக்கார நாடுகளில் ஒன்றாக கத்தார் விளங்க காரணமான அந்த மாற்றங்களை  அலசியது.
 
1 . 1939ஆம் ஆண்டு எண்ணைய் வளம் கண்டுபிடிக்கப்பட்டது
 
கத்தார் அதன் கருப்பு தங்கத்தை கண்டுபிடித்தபோது, அது ஒரு நாடாக இருக்கவில்லை. 1916ஆம் ஆண்டில் இருந்து கத்தார் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்தது.
 
பல ஆண்டுகளுக்கு தொடர்ந்த ஆய்வுக்குப் பின்னர், 1939ஆம் ஆண்டு தோஹாவின் 80 கி.மீ தொலைவில் கத்தார் நாட்டின் மேற்கு கடற்கரைப்பகுதியில் துகானில் முதலாவது எண்ணெய் வள இருப்பு கண்டுபிடிக்கப்பட்டது. எனினும் அதை மூலதனம் செய்ய மேலும் சில ஆண்டுகள் ஆயின.
 
 
கத்தார் பொருளாதாரம் 1939இல் தீவிரமாக மாறத் தொடங்கியது. நாட்டின் மேற்கில் உள்ள துகான் பகுதியில் எண்ணெய் வளம் முதன் முதலாக கண்டுபிடிக்கப்பட்டன.
 
“இரண்டாவது உலகப்போர் தொடங்கியபோது இந்த கண்டுபிடிப்பு நேரிட்டது. இதனால் 1949ஆம் ஆண்டு வரை எண்ணைய் ஏற்றுமதி செய்யப்படுவது தடுக்கப்பட்டிருந்தது.
 
ஆகையால் பலன்கள் கிடைக்கத் தொடங்கவில்லை,” என விவரிக்கிறார் பிபிசியிடம் அமெரிக்காவில் உள்ள பேக்கர் நிறுவனத்தைச் சேர்ந்த ஆய்வாளர் கிறிஸ்டியன் கோட்ஸ் உல்ரிச்சென்.
 
எண்ணெய் ஏற்றுமதியானது கத்தார் நாட்டுக்கு பரவலான வாய்ப்புகளுக்கான கதவுகளை திறந்து விட்டது. அதன் வாயிலாக விரைவாக மாற்றங்களும் நவீனமும் தொடங்கின.
 
எண்ணெய் தொழிலின் வளர்ச்சியின் காரணமாக வெளிநாடுகளில் இருந்து தொழிலாளர்கள் வருவது அதிகரித்தது. முதலீட்டாளர்களும் கத்தாருக்கு வரத்தொடங்கினர்.
 
அதன் மக்கள்தொகை அதிகரிக்கத் தொடங்கியது. 1950ஆம் ஆண்டு 25,000க்கும் குறைவாக இருந்த மக்கள்தொகை எண்ணிக்கை 1970ஆம் ஆண்டுக்கு முன்பே ஒரு லட்சத்துக்கும் அதிகமாக ஆனது.
 
மீனவர்கள், முத்து சேகரிப்பாளர்கள் கொண்டதாக இருந்த நாடானது, 1970ஆம் ஆண்டு கத்தாரின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 300 மில்லியன் டாலருக்கும் அதிகமாக கொண்ட நாடாக ஆனது.
 
ஒரு ஆண்டு கழித்து பிரிட்டிஷ் ஆதிக்கத்தின் முடிவில் சுதந்திர நாடாக கத்தார் ஒருங்கிணைக்கப்பட்டது. ஒரு புதிய சகாப்தமாக, அதிக செல்வத்தை உருவாக்கும் இரண்டாவது கண்டுபிடிப்பையும் கொண்டு வந்தது.
 
2. இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு
 
கத்தாரின் கடற்பகுதியில் வடகிழக்கே வடக்கு வயலில், அதிக அளவுக்கு இயற்கை எரிவாயுவைக் கொண்ட ஒரு இருப்பை ஆராய்ச்சி பொறியாளர்கள் 1971ஆம் ஆண்டு கண்டுபிடித்தனர். அப்போது சிலர் இது முக்கியத்துவம் வாய்ந்தது என்று நம்பினர்.
 
அதற்கு 14 ஆண்டுகாலம் பிடித்ததுடன், 12க்கும் மேற்பட்ட கிணறுகளை தோண்டி புவியுடன் தொடர்புபடுத்தப்படாத பெரிய இயற்கை எரிவாயு வயல் வடக்கு பகுதி வயலில் இருந்தது அறிந்து கொள்ளப்பட்டது. உலகில் தெரிய வந்த இயற்கை எரிவாயு இருப்புகளில் இது தோராயமாக 10 சதவிகிதம் என்று கணக்கிடப்பட்டது.
 
இது நடைமுறையில், மக்கள் தொகை ரீதியாகவும், பரப்பளவு வாரியாகவும் மிகவும் பெரிய நாடுகளான ரஷ்யா, ஈரான் ஆகியவற்றுக்கு அடுத்து கத்தார் உலகின் பெரிய எரிவாயு இருப்பை கொண்டிருந்த நாடு என்ற பெயரைப் பெற்றது.
 
வடக்கு வயல், தோராயமாக 6,000 கி.மீ பகுதியைக் கொண்டிருந்தது. இது கத்தாரின் பாதி அளவு நிலமாகும்.
 
 
 
கத்தார் கேஸ் என்ற நிறுவனம் உலகில் திரவ இயற்கை எரிவாயுவை அதிக அளவில் உற்பத்தி செய்தது.
 
இந்த துறையின் முன்னெடுப்பு, கத்தாரின் பொருளாதார வளர்ச்சியில் முக்கியமான காரணியாக இருந்தது.
 
எண்ணைய் ஏற்றுமதியைப் போல எரிவாயு ஏற்றுமதியிலும் பெரும் அளவிலான லாபம் மெதுவாக வரத்தொடங்கியது.
 
“நீண்டகாலமாக, தேவை என்பது பெரிதாக இல்லை. அதனை முன்னெடுப்பதில் பெரிய ஆர்வமும் இருக்கவில்லை. பல்வேறு கட்டங்களாக கட்டமைப்புகளை உருவாக்க தொடங்கியபோது இது உள்நாட்டுக்குள் விநியோகம் செய்யப்பட்டது.
 
1980களில் எல்லாமே மாறத்தொடங்கியது. 1990ஆம் ஆண்டுகளில் அதனை ஏற்றுமதி செய்யும் பணிகள் தொடங்கின. பொருளாதாரத்தை அதிகரிக்கும் பெரும் இயந்திரமாக உருவானது,” என்றார் கோட்ஸ்.
 
3. 1995ஆம் ஆண்டு அரண்மனை ஆட்சி கவிழ்ப்பு
 
21ஆம் நூற்றாண்டு தொடக்கத்தில், கத்தாரின் பொருளாதார வளர்ச்சி கோடு ஒரு பாய்ச்சலை எடுத்தது.
 
2003-2004ஆம் ஆண்டுக்கு இடையே நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது 3.7 சதவிகிதத்தில் இருந்து 19.2 சதவிகிதமாக வளர்ச்சியை நோக்கி இருந்தது. இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் 2006ஆம் ஆண்டில் பொருளாதாரம் மேலும் விரிவடைந்து ஜிடிபி 26.2 சதவிகிதமாக இருந்தது.
 
இரட்டை இலக்க ஜிடிபி வளர்ச்சியானது, பல ஆண்டுகளாக கத்தாரின் வலுவுக்கு குறிப்பிடத்தக்க அம்சமாக இருந்தது. இது வாயுவின் மதிப்பால் மட்டும் விளக்க முடியாத ஒரு நிகழ்வு.
 
“1995ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த தற்போதைய அரேபிய சிற்றரசர் தமீம் பின் ஹமத் அல் தானியின் தந்தை ஹமத் பின் கலீஃபா அல் தானியின் அரசியல் மாற்றத்துக்குப் பிறகு இது நடந்தது.
 
அது எப்படி ஏற்பட்டது என்பது ஒரு சர்ச்சைக்குரிய நிகழ்வாக இருக்கிறது,” என பிபிசியிடம் , கத்தார் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும், நிலையான பொருளாதாரத்தின் நிபுணருமான முகமது சைடி கூறினார்.
 
ஹமத் பின் கலீஃபா அல் தானி தனது தந்தை சுவிட்சர்லாந்திற்குச் சென்றிருந்தபோது அந்நாட்டின் சிற்றரசராக பதவி ஏற்றார். கடந்த ஒன்றரை நூற்றாண்டுகளாக கத்தாரை அல்தானி வம்சம் ஆண்டது. அதிகாரத்தின் இந்த வகையான ஆட்சி மாற்றம் அசாதாரணமானது அல்ல.
 
ஆனால், இந்த அரண்மனை சூழ்ச்சிக்கு இடையே, இந்த அரசியல் நிகழ்வானது, நாட்டின் வரலாற்றில் முன்னும் பின்னும் என்பதாக குறிப்பிடப்படுகிறது.
 
“பிரித்தெடுத்தல், திரவமாக்கல் மற்றும் விநியோக உள்கட்டமைப்புகளில் முதலீடுகள் அதன் மிகப்பெரிய இருப்புகளின் செயல்திறனை மேம்படுத்த பல மடங்கு அதிகரித்தன, மேலும் இது ஏற்றுமதியில் அதிவேக அதிகரிப்புக்கு மாற்றப்பட்டது” என்று ஸ்பானிஷ் வெளிநாட்டு வர்த்தக நிறுவனம் (ICEX) விளக்குகிறது.
 
1996ஆம் ஆண்டு ஜப்பானுக்கு ஒரு சரக்குப் பெட்டகம் முழுவதும் திரவ இயற்கை எரிவாயு அனுப்பப்பட்டது. இது கத்தாரின் முதலாவது பெரிய ஏற்றுமதியாகும். பல பில்லியன் டாலர் தொழிலின் ஆரம்பமாக கத்தாரின் உலகளாவிய செல்வத்தை உச்சத்திற்கு உயர்த்தியது.
 
கத்தாரின் தனிநபர் ஜிடிபி, 2021ஆம் ஆண்டு 61,276 டாலர் ஆக இருந்தது. நாம் மக்களின் வாங்கும் சக்தியையும் சமமாக கணக்கில் கொண்டால், இந்த எண்ணானது 93,521 டாலர் ஆக உயரும். உலக வங்கியின் கூற்றுப்படி உலக நாடுகளிலேயே இது உயர்ந்த அளவாகும்.
 
கத்தாரின் சிறிய மக்கள் தொகை, மிக அதிமான வித்தியாசத்தை உருவாக்கி இருக்கிறது. கத்தார் மக்களின் தொகையானது 3 லட்சம் முதல் 3.50 லட்சம் பேர் வரையே இருக்கும். 30 லட்சம் பேரில் 10 சதவிகிதம் பேர் வெளிநாட்டினர் ஆவர்.
 
“மக்கள் தொகை மிகவும் சிறியதாக இருக்கும் நாடானது எதிர்காலத்தில் பெரும் நன்மைகள் பெறும் என்று இதனால்தான் சொல்லப்படுகிறது. இது தனிநபர் வருவாய் ஜிடிபியை மிக வேகமாக வளர்த்தெடுக்கிறது,” என்றார் கோட்ஸ்.
 
கத்தார் நாட்டில் உத்தரவாதமான அதிக சம்பளம் என்பதுடன் கூடுதலாக, பொது கல்வி, பொதுசுகாதார முறைகளிலையும் வலுவாக வழங்குகிறது.
கத்தார் உலக கோப்பை
 
 
 
20ஆம் நூற்றாண்டின் இறுதி மற்றும் 21ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கத்தார் பொருளாதாரத்தின் அற்புதமான வளர்ச்சியின் திருப்புமுனைகளில் ஒன்றாக, ஹமத் பின் கலீஃபா அல் தானியின் சர்ச்சைக்குரிய அதிகார எழுச்சியை வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
 
கத்தார் பொருளாதாரத்தின் சவால்கள்
 
எனினும், கத்தாரின் அற்புதமான பொருளாதார வளர்ச்சியும் பின்னடைவுகளால் பாதிக்கப்பட்டது.
 
சமீபத்திய ஆண்டுகளில் மெதுவாக உள்ளது. குறைந்தபட்சம் புதைபடிவ எரிபொருட்களை நம்பியிருப்பது மட்டும் அல்ல. தற்போது அவற்றின் காலநிலை தாக்கம் குறித்த பெரும் ஆய்வுக்கான சவால்களையும் எதிர் கொண்டுள்ளது.
 
“2013 மற்றும் 2014ஆம் ஆண்டுகளில் எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்தது. பொருளாதார பல்வகைப்படுத்தல் என்பது விவாதத்துக்கான முக்கியமான பொருளாக மாறியது,” என அல் சைடி கூறுகிறார்.
 
இதனோடு சேர்த்து, தோஹாவுடனான ராஜதந்திர மோதலுக்குப் பிறகு 2017 மற்றும் 2021ஆம் ஆண்டுக்கு இடையே சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட், பஹ்ரைன், எகிப்து நாடுகளால் மேலும் தடைவிதிக்கப்பட்டது. இது கத்தார் பொருளாதாரத்தின் பின்னடைவுக்கு சவால் விடுக்கும் வகையில் இருந்தது.
 
கத்தார் உலக கோப்பை
 
 
 
லண்டனில் உள்ள மிக உயரமான கட்டடமான ஷார்ட், கத்தாரின் இறையாண்மை செல்வ நிதிய முதலீட்டின் அங்கமாகும்.
 
“கத்தார் இன்னும், எரிவாயு அல்லது எண்ணெய் பொருளாதாரத்துக்கு பிந்தைய பொருளாதாரத்தை கட்டமைக்கவில்லை. இதனால்தான் கத்தார் அரசானது, தனியார் துறையை விரிவாக்க முயற்சி செய்கிறது. ஹைட்ரோகார்பன்கள் மீது தங்களுடைய சார்பைக் குறைக்க உலகம் முழுவதும் நிறைய முதலீடு செய்கின்றனர்,” என கோட்ஸ் கூறுகிறார்.
 
லண்டன் அல்லது நியூயார்க் போன்ற நகரங்களில் பல புகழ்பெற்ற சொத்துக்களில் மாநில இறையாண்மை நிதி இருப்பது கத்தார் முதலீட்டு ஆணையத்தின் இந்த முயற்சி ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளது.
 
“சந்திப்புகள், மாநாடுகள், நிகழ்வுகளுக்கான ஒரு மையமாக தோஹாவை மாற்றுவது குறிப்பாக இப்போது உலகக்கோப்பைக்காக மாற்றியது ஆகியவற்றின் மூலம் சுற்றுலாவை ஊக்குவிக்க, அவர்கள் எவ்வாறு முயற்சிக்கின்றனர் என்பது தெரியவருகிறது,” என்றார் கோட்ஸ்.
 
செல்வ வளமான கத்தார் பொருளாதாரம், உலக கோப்பையில் முதலீடு செய்யப்பட்டுள்ள 2 லட்சம் மில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான தொகையிலும் எதிரொலிக்கிறது. 8 மைதானங்கள், ஒரு புதிய விமான நிலையம், ஒரு புதிய மெட்ரோ பாதை என இந்த நிகழ்வுக்காக பட்டியலிடப்பட்டுள்ள பல்வேறு உள்கட்டமைப்புகளில் சிலவாகும். இது உலக வரலாற்றில் மிகவும் அதிக செலவினமாக கருதப்படுகிறது.
 
இந்த நிகழ்வுக்கான முன் தயாரிப்புகளில் கத்தார் ஈடுபட்ட விதம் குறித்து உலகின் பெரும் பகுதியில் கேள்விகள் எழுப்பப்படுகிறது.
 
கட்டுமானப்பணிகளில் ஈடுபடுத்தப்பட்ட நேபாளம், இந்தியா, வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து வந்த பல தொழிலாளர்களின் நிலை பற்றி மனித உரிமை அமைப்புகளிடம் இருந்து புகார்கள் வந்திருக்கின்றன.
 
கத்தார் 12 ஆண்டுகளாக வரலாற்றில் மிகவும் விலை உயர்ந்த விளையாட்டுகளில் ஒன்றான உலக கோப்பையை நடத்த தயாராகி வந்தது.
 
இது தவிர, இந்த போட்டிகளை நடத்துவதற்கான பொறுப்பு 2010ம் ஆண்டு வழங்கப்பட்டபோது, கத்தார் மற்றும் சர்வதேச கால்பந்து சங்க கூட்டமைப்பு (FIFA) ஆகியவற்றுக்கு எதிராக இதர முறைகேடு, லஞ்சப்புகார்கள் எழுந்தன.
 
இத்துடன், பெண்கள் உரிமைகள் , எல்ஜிபிடி (LGBT ) சமூகத்தினர் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. பழமைவாத மற்றும் கண்டிப்பான நாடு என்று முத்திரை குத்தப்பட்ட நாட்டில் பலர் இந்த நிகழ்வை கத்தார் மீது உள்ள களங்கத்தை நீக்கும் நடவடிக்கை என்று கருதுகின்றனர்.
 
இந்த கண்டனங்களுக்கு அப்பால், இது குறிப்பிட்ட காலத்துக்குள் செல்வ வளம் பெற்ற ஒரு சிறிய நாட்டுக்கு உலகக் கோப்பையை விடவும் மிகவும் அதிகம் என்பது தெளிவாகிறது.
 
அது இப்போது மிகவும் நவீன மற்றும் முற்போக்கான பிம்பத்தின் கீழ் ஒரு முக்கிய புவிசார் அரசியல் முன்னெடுப்பாளராக தன்னை நிலைநிறுத்திக் கொள்ள முயல்கிறது.Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies