.
நாளொன்றுக்கு 10 முதல் பதினைந்து பேர் வரை தன்னை பாலியல் வன்புணர்வு செய்து வந்ததாக 14 வயது சிறுமி புகார் தெரிவித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாளொன்றுக்கு 10 முதல் பதினைந்து பேர் வரை தன்னை பாலியல் வன்புணர்வு செய்து வந்ததாக 14 வயது சிறுமி புகார் தெரிவித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரியானா மாநிலம் குருகிராமில் இந்த கொடூரம் நடந்துள்ளது.
பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆறு மாதக் குழந்தை முதல் 60 வயது மூதாட்டிகள் வரை பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்படுகின்றனர். இதை தடுக்க அரசும் காவல்துறையும் எத்தனையோ நடவடிக்கை எடுத்தும் குற்றங்கள் குறைந்தபாடில்லை , பல நேரங்களில் குடும்ப சூழ்நிலை வறுமை காரணமாக பெண்கள் பாலியல் என்ற நரகத்திற்குள் தள்ளப்படுகின்றனர், சிலர் அதிலிருந்து வெளியில் வர தெரியாமல் சிக்கி சின்னாபின்னமாகி ன்றனர், இன்னும் சிலர் துணிந்து வெளியில் வந்து பலரிட் வக்கிர முகங்களை வெளிச்சம் போட்டு காட்டுகின்றனர்.
இதுபோன்ற ஒரு சம்பவம் அரியானா மாநிலம் குர்கிராமில் நடந்துள்ளது. முழு விவரம் பின்வருமாறு:- ஹரியான மாநிலம் குர்கிராமில் புதன்கிழமை இரவு செக்டார்-51 காவல் நிலையத்தில் 14 வயது இளம்பெண் புகார் ஒருவர் புகார் ஒன்று கொடுத்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் 4 பேர் மீது எப்ஐஆர் பதிவு செய்துள்ளனர். முழு விபரம் பின்வருமாறு:- செக்டார் 49-ல் வசித்து வந்த இளம்பெண் குடும்ப வறுமை காரணமாக வேலை தேடி வந்தார், அப்போது பூஜா என்ற பெண்ணை அவர் சந்தித்தார், அவர் மூலம் ஒரு கிளிக்கில் அந்த பெண்ணுக்கு வேலை கிடைத்தது.
ஆனால் வேலைக்கு சேர்ந்த இரண்டு நாட்களிலேயே அந்தப் பெண் பணியிலிருந்து அனுப்பப்பட்டார், பின்னர் அந்த பெண்ணுக்கு பூஜாவின் உதவியுடன் ஸ்பாவில் வேலை கிடைத்தது, வேலைக்கு சேர்ந்த முதல் நாளே, அந்த பெண் ஸ்பாவுக்கு வரும் வாடிக்கையாளர்களுடன் உடலுறவில் ஈடுபட வற்புறுத்தப்பட்டார். வேறு வழியின்றி அந்தப் பெண் வலுக்கட்டாயமாக பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டார். பின்னர் அந்த பெண்ணை அங்கிருந்தவர்கள் ஆசை வார்த்தை கூறி தொடர்ந்து அதில் ஈடுபட வைத்தனர். பின்னர் அந்த பெண்ணை வீடியோ எடுத்து வைத்துக் கொண்டு, தினம் தினம் மிரட்டி உடலுறவில் ஈடுபடுத்தி வந்தனர்.
இந்த கொடூரம் ஐந்து நாட்கள்வரை தொடர்ந்தது. நாளொன்றுக்கு 10 முதல் 15 ஆண்கள் வரை அந்த பெண்ணைப் பாலியல் வன்புணர்வு செய்து வந்தனர், கொடுமை தாங்க முடியாமல் அந்தப் பெண் அது குறித்து செக்டார் 51 காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். சில ஆண்கள் தன்னுடன் உல்லாசத்தில் ஈடுபடும் வீடியோக்கள் காட்டி ஸ்பா உரிமையாளர் தன்னை மேலும் மேலும் பாலியலில் ஈடுபட வற்புறுத்தி வருவதாகவும் புகாரில் கூறினார், கடந்த ஐந்து நாட்களில் மட்டும் தினம் 10 முதல் 15 ஆண்கள் தன்னை பாலியல் வன்புணர்வு செய்து வந்ததாகவும் காவல்நிலையத்தில் கூறி கதறினார்.
இதுகுறித்து ஏற்கனவே அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார், ஆனால் அந்த புகார் கிடப்பில் போடப்பட்டது, அதற்கு காரணம் ஸ்பாவில் பணியாற்றும் ரூபல் என்பவர் தன்னை காதலிப்பதாக கூறி கற்பழித்து விட்டதாகவும் முதல் புகாரில் தெரிவித்திருந்தார். இரண்டாவது முறையே ஸ்பாவில் தான் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு வருவதாக அந்த பெண் கூறினார், அதில் ஜுமா, பூஜா, ரூபெல், சதாம் , ஆகியோர் தன்னை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்ததாக அந்த பெண் குற்றம் சாட்டியுள்ளார்.
தனக்கும் தனது பெற்றோர்களுக்கும் இவர்களால் ஆபத்து இருப்பதாகவும், அந்த பெண் அந்த புகாரில் கூறியுள்ளார். முதன் முதலில் பூஜை என்ற பெண் தன்னை அணுகியதுடன், தனது அத்தை ஜூமா நடத்திவரும் ஸ்பாவில் ரிசப்ஷனிஸ்ட் வேலை காலியாக இருப்பதாக கூறி தன்னை பணியில் சேர்த்ததாகவும், அந்தப் பெண் தனது புகாரில் கூறியுள்ளார். இதில் போலீசார் 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து அந்த புகாரில் உண்மை தன்மை குறித்து விசாரித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.