ஆண்மைக் குறைவு என்பது ஆண்கள் பிறப்புறுப்பில் ஏற்படும் நோய் குறைபாடு அல்ல. முக்கிய உறுப்புகளில் செயல்பாட்டில் இருக்கும் பின்னடைவு தான் ஆண்மை குறைவு பிரச்னை ஏற்படுகிறது. ஒருசில சமயங்களில் அது முழு உடல் சார்ந்த பிரச்னையாகவும் இருக்கிறது. உயிர்களுக்கு பாலியல் இன்பம் மிகவும் முக்கியமானது அவசியமானது. அது மனிதனுக்கும் பொருந்தும்.
மனிதனுக்கு பாலியல் செயல்பாடுகள் ஏதாவது குறைபாடு இருப்பதாக தெரிந்தால், உடனடியாக அதற்குரிய சிகிச்சையை மேற்கொள்வது முக்கியம். அதற்கு முன்னதாக ஆண்மை குறைபாடு பிரச்னை இருப்பதை ஒருவர் கண்டறிவது என்பது தான் முக்கியமானது. பலருக்கும் இதுதொடர்பான புரிதல் இல்லாமல் உள்ளது.
ஆண்மைக் குறைபாடு பெரும்பாலான சமயங்களில் முழு உடலும் மனமும் சார்ந்த பிரச்னையாகவே உள்ளது. அதற்கு மூளை, இருதயம், கல்லீரல், விதைப்பை மற்றும் நரபு மண்டலம் உள்ளிட்டவற்றின் ஆரோக்கியம் முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் ஏதாவது ஒரு உறுப்புக்கு பாதிப்பு இருந்தாலும், அது ஆண்களுக்கான பாலியல் உணர்வையும் செயல்பாட்டையும் பாதிக்கும்.
நமக்கு இருக்கும் பாலியல் உணர்வை தூண்டுவதில் மூளைக்கு முக்கிய பங்குண்டு. உடலுக்குள் பாலியல் உணர்வை தூண்டி, அதுதொடர்பான ஆசையை நிறைவேற்றுவதற்கு மற்ற உறுப்புகளுக்கு கட்டளையிடுவது மூளை தான். அதற்கு பிறகு இருதயம் வேகவேகமாக துடிப்பதுடன் தனது செயல்பாட்டை தொடங்கும். அங்கிருருந்து ஏற்படும் உணர்வு ஆண் உறுப்புக்கு அனுப்பும்.
அதையடுத்து ஆணுறுப்பை விம்மி எழ வைப்பது கல்லீரல் தான். அதிலிருந்து உற்பத்தியாகும் பித்தவாய்வு ஆணுறுப்பை அடையும் போது, பாலியல் உணர்வு உச்சக்கட்டம் அடைகிறது. அப்போது இருதயத்தில் இருந்து வரும் ரத்தமும் பித்த வாயுடன் கலந்து ஆணுறுப்பை வலிமை பெறச் செய்கிறது. இதையடுத்து விதைப்பையில் இருந்து உற்பத்தியாகும் விந்தணு ஆணுறுப்பை அடைகிறது.
இந்த அனைத்து செயல்பாடுகளும் நடப்பதற்கு நரம்பு மண்டலம் நல்லபடியாக செயல்பட வேண்டும். ஆணுக்குரிய பாலியல் செயல்பாட்டை வலுவாக நடைபெறுவதற்கான அனைத்து உறுப்புகளும் நல்லமுறையில் இயங்குவதற்கு நரம்பு மண்டலம் முக்கியமாக தேவைப்படுகிறது. இவை அனைத்தும் நல்லமுறையில் செயல்பட்டால் மட்டுமே ஆண்மை சக்தி ஏற்படுகிறது.
இதில் எந்த உறுப்பு பாதிக்கப்பட்டாலும் ஆண்மை குறைவு ஏற்படுவது உறுதி. இதற்கான முதல் அறிகுறிய மூளையில் சிறப்பன்ப ஆசையே உண்டாகுது. ஒருவேளை இருதயத்தில் பாதிப்பு இருந்தால் ஆணுறுப்பு மெலிந்து சிறுத்துப் போகும். கல்லீரலில் பாதிப்பு இருந்தால், ஆணுறுப்பு எழுச்சி அடையாது. விதைப்பையின் பலகீனத்தால் ஆண்மை குறைவு ஏற்பட்டால், விந்து உற்பத்தி குறைவாக இருக்கும்.
உங்களுக்கு இருக்கும் அறிகுறிகளை ஆராய்ந்து ஆண்மை குறைவு பிரச்னைக்கு தீர்வு காணலாம். அதேபோல ஆண்மைக் குறைவு இருந்தால், அதற்குரிய மருத்துவரை காணாமல் நீங்களாகவே எந்தவிதமான மருத்துவ முறைகளையும் பின்பற்றக் கூடாது. அலோபத்தி, சித்தா, ஆயுர்வேதம் என பல்வேறு மருத்துவ முறைகளில் ஆண்மைக் குறைவுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. எனினும் அதை முடிவு செய்ய வேண்டியது மருத்துவர் தானே தவிர, நீங்கள் அல்ல,