ஆட்டோவில் பாலியல் தொல்லை- ஆட்டோவிலிருந்து குதித்த இளம்பெண் படுகாயம்!
18 Nov,2022
அவுரங்காபாத்தில் ஆட்டோரிக்சாவில் பாலியல்தொல்ல கொடுத்த நபரிடம் இருந்து தப்பிக்க ஆட்டோவிலிருந்து குதித்த இளம் பெண்ணுக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பான சிசிடிவி காட்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவுரங்காபாத்தில் ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநர் சையத் அக்பர் சையத் ஹமீது என்பவர், தன் ஆட்டோவில் ஏறிய மைனர் பெண்ணிடம், பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக தெறிகிறது. அவரிடம் தப்பிக்க முயன்ற இளம்பெண், ஆட்டோவிலிருந்து குதித்துள்ளார். படுகாயமடைந்த இளம்பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.