செக்ஸ்சோம்னியா நோய் என்றால் தூக்கத்தில் உடலுறவு கொள்வது, காலையில் எழுந்தது அனைத்தையும் மறந்துவிடுவதே ஆகும். இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் தூங்கும் போது, மற்றவர்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தக்கூடும்.
தூக்கத்தில் நடப்பதும் பேசுவதுமான நோயைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். அதை தூக்கக் கோளாறு நோய் என்று குறிப்பிடுகிறோம். அதே போல, தூக்கத்தில் பாலுறவுகொள்வதும் காலை எழுந்ததும் அதை மறந்துவிடுவதும் ஒரு நோய் தான். இது செக்ஸ்சோம்னியா என்று அழைக்கப்படுகிறது. செக்சோமேனியா நோயால் பாதிக்கப்பட்ட நோயாளி தூக்கத்தில், அவரை அறியாமலேயே சுயஇன்பம் காண்பார். ஒருவேளை துணை அருகில் இருந்தால், உடலுறவு கொள்வர். இதனால் அவர் விழித்திருக்கிறார் என்று நினைத்துவிட வேண்டாம். இந்த செயல்பாடுகள் அனைத்தும் பாதிக்கப்பட்ட நபர் தனது தூக்கத்தில் தான் செய்கிறார். காலையில் எழுந்ததும், அப்படியொரு சம்பவம் நடந்ததே அவருக்கு நினைவில் இருக்காது. செக்ஸ்சோம்னியா நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் கோபம், குழப்பம், குற்ற உணர்வு, பயம், வெறுப்பு மற்றும் அவமானம் போன்ற எதிர்மறை உணர்ச்சிகளை கொண்டிருப்பார். இதுபோன்ற உணர்வுநிலைகள், பாதிக்கப்பட்ட நபரை பாலியல் அத்துமீறல் செய்யத் தூண்டுவதாகவும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
ஆண்கள் தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
செக்ஸ்சோம்னியா நோயினால் பாதிக்கப்பட்டவர்களில் பெண்களை விட ஆண்கள் தான் அதிகம். அமெரிக்கன் அகாடமி ஆஃப் ஸ்லீப் மெடிசின் வெளியிட்ட ஆய்வின் மூலம் இந்த தகவல் தெரியவந்துள்ளது. பெண்களை விட ஆண்களுக்கு செக்ஸ்சோம்னியாவின் அறிகுறிகளை வெளிப்படுத்தும் வாய்ப்பு மூன்று மடங்கு அதிகம் என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்நோயினால் பாதிக்கப்படும் பெண்கள் சுயஇன்பத்தில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று கூறப்பட்டுள்ளது.
செக்ஸ்சோம்னியா பாதிப்பு
கடந்த 2015-ம் ஆண்டு ஜூலை மாதம் தேசிய மருத்துவ நூலகத்தால் வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்நோய் பாதிப்பு குறித்த தகவல்கள் இடம்பெற்றுள்ளன. அதில் குறிப்பிடப்பட்டுள்ள சம்பவத்தில், கணவர் தனது மனைவியின் பாலியல் நடத்தை குறித்து புகார் அளித்துள்ளார். இரவில் தானே விருப்பப்பட்டு உறவுகொள்ளும்போது மனைவி அழ ஆரம்பிப்பதாகவும், ஆனால் மனைவி இரவில் சுயஇன்பம் செய்வதையும் பார்த்துள்ளார். அதுகுறித்து அடுத்த நாள் மனைவியிடம் கேட்ட போது, சுயஇன்பம் செய்தது குறித்து, தனக்கு எதுவும் நினைவில் இல்லை என்று மனைவி கூறியுள்ளார். இருமுறை இப்படி நடந்ததை அடுத்து, மனைவியை கடந்த 2010-ம் ஆண்டு மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளார். அப்போது நடத்தப்பட்ட பரிசோதனையில் மனைவிக்கு செக்ஸ்சோம்னியா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த நோய் மிகவும் அரிதானது என்றாலும், கடந்த 2008-ம் ஆண்டு தான் முதன்முதலில் இந்நோய் பாதிப்பு இந்தியாவில் தெரியவந்தது.
செக்ஸோமேனியாவின் அறிகுறிகள்
-தூங்கும் போது நடந்த சம்பவங்கள் குறித்து காலையில் எழுந்தவுடன் நினைவில் இல்லாமல் போவது. இரவில் தூக்கத்தில் நடந்த சம்பவங்களை நினைவில் வைத்துக்கொள்ள முடியாமல் போவது.
-உடன் தூங்கும் துணையுடன் கட்டாய உடலுறவில் ஈடுபடுவது, உடலுறவின் போது உணர்ச்சியற்றவர்களாக இருப்பது. (இது பொதுவாக ஆண்களிடம் இருக்கக்கூடிய பாதிப்பு).
-தூக்கத்தில் சுயஇன்பம் காண்பது (இது ஆண்கள், பெண்கள் என இருவரிடத்திலும் காணப்படுகிறது)
-தூங்கும் போது தவறான வார்த்தைகளை பயன்படுத்துதல் மற்றும் உடலுறவின் போது அதிக ஆக்ரோஷத்துடன் இருப்பது.
தூக்கத்தில் புலம்பல்
உள்ளிட்ட அறிகுறிகள் முதன்மையானதாக செக்ஸோமேனியா பாதிப்பை உணர்த்துகின்றன.
செக்ஸோமேனியா பாதிப்பு ஏற்படக் காரணம்
- அதிக மது அருந்துதல்
- போதைப் பழக்கம்
- மன அழுத்தம்
- போதுமான தூக்கம் இல்லாமல் இருப்பது
- அல்சைமர் பாதிப்பு
- சட்டவிரோத மருந்துகளின் பயன்பாடு
- அதிக அழுத்தம் நிறைந்த பணி நேரங்கள்
போன்றவை இந்நோய் ஏற்படுவதற்கான முக்கிய காரணங்களாக உள்ளன.
செக்ஸோமேனியா சிகிச்சை
இதுபோன்ற பாதிப்புகள் உங்களுடைய துணையிடமோ அல்லது யாரிடமாவது காணப்பட்டால், உடனடியாக அவரை பாலியல் நிபுணரிடம் அழைத்துச் செல்ல வேண்டும். நன்றாக தூங்கி ஓய்வெடுத்தாலே நல்ல முன்னேற்றம் இருக்கும். நோயாளிக்கு நல்ல தூக்கம் வரும்போது செக்ஸ்சோம்னியாவின் அறிகுறிகள் குறைந்துவிட்டன அல்லது மறைந்துவிடும் என்று பெரும்பாலான அறிக்கைகள் காட்டுகின்றன. மேலும், ஒருசில குறிப்பிட்ட மருந்துகள் நோயாளிக்கு கொடுக்கப்படுகின்றன. அதன்மூலமாகவும் முன்னேற்றம் ஏற்படுகிறது. வாழ்க்கை முறையை மாற்றுவதன் மூலமும் இந்நோய் பாதிப்பை கட்டுப்படுத்தலாம்.
செக்ஸ்சோம்னியா உள்ள சிலர், இரவில் தனியாக படுக்கையறையில் தங்களைப் பூட்டிக்கொள்வதன் மூலமோ அல்லது தங்கள் படுக்கையறை கதவில் எச்சரிக்கை அமைப்பை வைப்பதன் மூலமோ பிரச்சனைக்குரிய அறிகுறிகளைத் தணிக்கிறார்கள். யாராவது இந்த நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், அவர் இரவில் தனியாக தூங்க வேண்டும். அதனால் அவர் வேறு யாருக்கும் பாலியல் ரீதியாக தீங்கு செய்ய முடியாது.