தமிழ்க் கடவுள் முருகன் பற்றிய சுவாரசியமான வட இந்திய நம்பிக்கைகள்
தந்தைக்கு உல்லாச அழகிகளை விருந்தாக்கிய மகள்... 100ஆவது பிறந்தநாளுக்கு பரிசு!
பிறந்தநாள் கொண்டாட்டம் என்பது சிறுவர்களுக்கு பெரும் உற்சாகத்தை அளிக்கக்கூடியதாக இருக்கும். அன்றைய நாளின் கதாநாயகனாக, தனது வீட்டில் இருந்து பள்ளி வரை அனைத்து இடங்களிலும் அனைத்து தரப்பினரும் வாழ்த்து மழை பொழிவார்கள்.
பிறந்தநாளுக்கு புது ஆடை எடுப்பது, வாட்ச், கண்ணாடி, விளையாட்டு பொருள்களை பெற்றோரிடம் கேட்பது, அனைவருக்கும் இனிப்பு கொடுப்பது என வருட முழுவதும் காத்துக்கிடந்த ஒரே நாளில் மகிழ்ச்சியைத் தவிர வேறு எதையும் அண்டவிடமார்கள். வசதி குறைவாயினும், எதிர்பார்ப்புகளையும் குறைத்து அதில் மகிழ்ச்சிகொள்பவர்களும் உண்டு.
ஆனால், வயதாக வயதாக பிறந்தநாள் கொண்டாட்டம் ஒரு சடங்காக மாறுவதாக மத்திய தர வயதினர் கருதுகின்றனர். அனைவரும் சம்ரதாயத்திற்கு வாழ்த்து சொல்வது, கேக் வெட்டுவது என காட்சிகள் மாறுவதாக அவர்கள் நினைக்கின்றனர். பின்னர், 50 வயதை தாண்டியவுடன் ஒவ்வொரு பிறந்தநாளும் அவர்களுக்கு ஆயுளின் போனஸ் ஆக கருத தொடங்கிவிடுகின்றனர்.
எனவே, சிறுவயதில் ஏற்பட்ட அத்தனை உணர்வுகளையும் மீட்டுருவாக்கம் செய்ய வேண்டும் என பெரியவர்கள் ஆசைப்படுவார்கள். அப்படி, தங்களுக்கு தேவையான பலகாரங்கள், உடைகள் போன்றவற்றை பிறந்தநாளுக்கு என்று பிள்ளைகளை கேட்டு வாங்கிக்கொள்வார்கள்.
ஆனால், அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் ஒரு பெண், அவரது தந்தையின் 100ஆவது பிறந்தநாளுக்கு, அவரது மனதை அறிந்து, அவர் கேட்காத ஓர் ஆச்சரிய பரிசாக அளித்திருக்கிறார். அந்த பரிசும், அதை அந்த பெரியவர் கொண்டாடிய விதமும்தான் இணையத்தையே பற்றி எரியச்செய்துள்ளது. https://zeenews.india.com/tamil/topics/America
ஜாக் என்ற முதியவர், சமீபத்தில் தனது 100ஆவது வயதை நிறைவு செய்துள்ளார். இன்றும் அவர் திடகாத்திரமாக நலமுடன் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில், டீனா என்ற அவரது மகள், உல்லாச கிளப்பிற்கு அழைத்து சென்று அழகிகளுடன் பிறந்தநாளை கொண்டாட ஏற்பாடு செய்துள்ளார்.
இதுகுறித்து டீனா கூறுகையில்,"எனது தந்தை சிறுவயதில் இருந்தே உல்லாச கிளப்பிற்கு வந்தில்லை. இந்த கிளப்பிற்கு தற்போது அவரை அழைத்து வந்தவுடன், சிறுகுழந்தை மிட்டாய் கடையை பார்ப்பதுபோல் மகிழ்ச்சியடைந்துவிட்டார். எனது தந்தைக்கு இந்த உலகத்தில் இரண்டுதான் மிகவும் பிடிக்கும். ஒன்று பெண்கள், மற்றொன்று பெண்ணின் மார்பகங்கள்" என வெளிப்படையாக பேசினார்.
தந்தை ஜாக்கை மகள் உல்லாச கிளப்பிற்கு அழைத்து வந்த உடன் உல்லாச அழகிகள் அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதற்கு மகள் டீனா,'எனது தந்தைக்கு கிடைப்பது ஒரு வாழ்க்கை தான். அதனால், பிடிப்பதை அனுபவித்து கொண்டாடட்டுமே' என அவர்களை சமாதானப்படுத்தியுள்ளார்.
'பெப்பர் பாஸ்தாவை ஒரு அழகி அவருக்கு ஊட்ட, மற்றொரு அழகி பிறந்தநாள் கேக்கை கொண்டுவந்து சிறப்பாக அவரை கொண்டாட்ட மனநிலைக்கு அழைத்து சென்றனர். அற்புதமான உணர்வு அது' என்றார், டீனா.
மகள் டீனா அங்கு நின்றுகொண்டு, அழகிகளை சமாளிக்க தனது தந்தைக்கு அறிவுரை கூறி வழிநடத்தியுள்ளார். தந்தை ஜாக்கின் மனைவி 12 ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்துவிட்டார். அதன்பின், ஜாக் மற்றொரு பெண்ணுடன் உறவில் இருந்துள்ளார். அந்த பெண்ணும் சமீபத்தில் உயிரிழந்தவிட, கடந்த ஓராண்டாக தனிமையில் இருந்துள்ளார்.
எனவே, தந்தைக்கு புத்துணர்ச்சி அளிக்க அவரது மகள் இந்த காரியத்திற்கு ஒத்துழைப்பு அளித்துள்ளார். ஜாக்கின் வருகை தங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியதாகவும், அடிக்கடி இங்கு வர வேண்டும் எனவும் கூறி அவரை அழகிகள் வழியனுப்பி வைத்துள்ளனர்.