பாலியல் தொல்லை கொடுத்த மத போதகருக்கு 8,658 ஆண்டுகள் சிறைத்தண்டனை!
17 Nov,2022
பாலியல் தொல்லை கொடுத்த மதபோதகர் ஒருவருக்கு நீதிமன்றம் 8,658 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
துருக்கி நாட்டில் உள்ள மத போதகர் ஒருவர் பாலியல் வன்கொடுமை மற்றும் ராணுவத்தை உளவு பார்த்தல் ஆகிய குற்றச்சாட்டில் சிக்கி இருந்தார். அவர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு இருந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு சமீபத்தில் வழங்கப்பட்டது
இந்த தீர்ப்பில் மதபோதகர் குற்றவாளி என நிரூபணம் செய்யப்பட்டதை அடுத்து அவருக்கு 8,658 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அட்னான் அக்தார் என்ற 66 வயது துருக்கியைச் சேர்ந்த மதபோதகர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் புகழ் பெற்றவர் என்பதும் பழமைவாத கொள்கைகளை ஆதரிப்பவர் என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் பாலியல் வன்கொடுமை, சிறார்களை பாலியல் துஸ்பிரயோகம் செய்தல் மற்றும் ராணுவத்தில் உளவு பார்த்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் காரணமாக அவருக்கு 8,658 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது