80 வயதுடைய உரிமையாளர் தற்போது நகர்ப்புறத்தில் வசித்து வருவதால் கிராமத்தை பராமரிக்க முடியவில்லை. அதனால் அந்த கிராமத்தை விற்கும் எண்ணத்திற்கு வந்துள்ளதாக80 வயதுடைய உரிமையாளர் தற்போது நகர்ப்புறத்தில் வசித்து வருவதால் கிராமத்தை பராமரிக்க முடியவில்லை. அதனால் அந்த கிராமத்தை விற்கும் எண்ணத்திற்கு வந்துள்ளதாக
80 வயதுடைய உரிமையாளர் தற்போது நகர்ப்புறத்தில் வசித்து வருவதால் கிராமத்தை பராமரிக்க முடியவில்லை. அதனால் அந்த கிராமத்தை விற்கும் எண்ணத்திற்கு வந்துள்ளதாக
40க்கும் மேற்பட்ட வீடுகளைக் கொண்ட ஒரு ஸ்பானிஷ் கிராமம் 260,000 யூரோக்கள் அல்லது தோராயமாக ரூ. 2 கோடிக்கு விற்பனை செய்யப்படுகிறதாம் .
ரியல் எஸ்டேட் விலைகள் எல்லாம் வைரம் வைடூரியத்தை விட அதிக விலைக்கு விற்பனை ஆகிறது. ஒரு சிறிய வீடு வாங்கவே வாழ்நாள் முழுக்க கடன் கட்டிக்கொண்டிருக்கும் வேளையில் ஒரு கிராமத்தையே 2 கோடிக்கு விற்பனை செய்கின்றனர்.
சால்டோ டி காஸ்ட்ரோ எனும் ஒரு கிராமம், ஸ்பெயினுக்கும் போர்ச்சுகலுக்கும் இடையிலான எல்லையில் அமைந்துள்ளது. ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் இருந்து சுமார் மூன்று மணிநேர பயணத்தில் அமைந்துள்ள இந்த கிராமம் மூன்று தசாப்தங்களுக்கு மேலாக கைவிடப்பட்டு பாழடைந்து கிடக்கின்றது.
ஒரு செய்தி குறிப்பின்படி, இந்த கிராமத்தில் 44 வீடுகள், ஒரு ஹோட்டல், ஒரு தேவாலயம், ஒரு பள்ளி, ஒரு நகராட்சி நீச்சல் குளம், ஒரு விளையாட்டு பகுதி மற்றும் ஒரு பழைய சிவில் காவலர் முகாம்கள் உள்ளன.
கலீசியாவைச் சேர்ந்த ஒருவர் 2000-களின் முற்பகுதியில் சால்டோ டி காஸ்ட்ரோவை ஒரு சுற்றுலாத் தலமாக மாற்றும் நோக்கத்துடன் வாங்கினார். 2008 ஆம் ஆண்டின் பொருத்தர மந்தநிலை காரணமாக அவரது திட்டங்களை மேற்கொள்ள முடியவில்லை. வேலைகளை நிறுத்தி வைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
80 வயதுடைய உரிமையாளர் தற்போது நகர்ப்புறத்தில் வசித்து வருவதால் கிராமத்தை பராமரிக்க முடியவில்லை. அதனால் அந்த கிராமத்தை விற்கும் எண்ணத்திற்கு வந்துள்ளதாக கிராமம் விற்பனைக்கு பட்டியலிடப்பட்டுள்ள ஐடியலிஸ்டா இணையதளத்தில் தெரிவித்தார்.
இந்த கிராமத்தை €260,000க்கு ஒருவர் வாங்கியுள்ளார். இந்தத்தொகை இந்திய மதிப்பில் சுமார் ரூ.2 கோடிக்கு சமமாகும். இந்திய நில விற்பனை தொகைகளை ஒப்பிடுகையில், இது தில்லியில் உள்ள பல அடுக்குமாடி குடியிருப்புகளின் விலையைக் காட்டிலும் குறைவானது.
எவ்வாறாயினும், சால்டோ டி காஸ்ட்ரோவை யார் வாங்குகிறார்களோ அவர் அதை பராமரிக்க கிராமத்திற்கு பணம் செலுத்த வேண்டும். கிராமத்தை 100% வேலை செய்யக் கூடியதாகவும் லாபகரமாக மாற்றவும் 2 மில்லியன் யூரோக்கள் தேவைப்படும். விருப்பமுள்ளவர்கள் அந்த கிராமத்தை தன்னகப் படுத்திக்கொள்ளலாம் .