பெண் ஒருவரால் விரும்பப்படும் தருணம் ஆண்களின் வாழ்க்கையில் மறக்க முடியாத மற்றும் அரிதாகவே கிடைக்கும் நிகழ்வாகும். அது ஏன் அரிதானது என்றால் ஒரு பெண் உங்களை விரும்புகிறாரா என்பதை உங்களால் அவ்வளவு எளிதில் கண்டறிந்து விட முடியாது. நீங்களாக உங்கள் விருப்பத்தை முன்மொழியும் போது அவர்கள் அதனை வழிமொழிவர்களேத் தவிர அவர்களாக விருப்பத்தை வெளிப்படுத்த மாட்டார்கள்.
பெண்கள் தங்கள் விருப்பத்தை வெளிப்படையாக கூறாவிட்டாலும் தங்களுக்கு பிடித்த ஆணுக்கு ஒரு சில அறிகுறிகளை வெளிப்படுத்துவார்கள். அதனை ஆண்கள் சரியாக புரிந்து கொள்ளும் பட்சத்தில் அவர்களின் காதல் வாழ்க்கை இனிதே ஆரம்பமாகும். ஆனால் அதிலுள்ள சிக்கலே அந்த அறிகுறிகளை சரியாக கண்டறிவதுதான். இந்த பதிவில் பெண்கள் தங்கள் விருப்பத்தை வெளிப்படுத்தும் பொதுவான அறிகுறிகள் என்னென்ன என்று பார்க்கலாம்.
உங்களை அடிக்கடி பார்ப்பது மற்றும் சிரிப்பது ஒரு பெண் உங்களை விரும்புகிறார் ஆனால் அதனை மறைக்க முயன்றாலும் அவர்கள் விருப்பத்தை வெளிப்படுத்துவது அவர்களின் புன்னகைதான். உங்களின் வருகையை உணர்ந்த பிறகு அவர்களின் முகத்தில் ஒரு புன்னகை தானாக வந்தால் அவர்கள் உங்கள் மீது ஆர்வமாக இருக்கிறார் என்று அர்த்தம். அவர்கள் உங்களைப் பார்த்து புன்னகைத்து விட்டு வேறு எங்காவது பார்த்தாலும் அவர்களின் முகத்தில் காதலை நீங்கள் பார்க்கலாம். இருப்பினும் கவனத்தில் கொள்ளவும், எல்லா புன்னகைகளும் ஒரே மாதிரியாக இருக்காது. ஒரு சிறிய, இறுக்கமான புன்னகை அசௌகரியத்தைத் தெரிவிக்கும், ஆர்வத்தை அல்ல. அவர்கள் முகத்தில் இருக்கும் புன்னகை கண்களில் இல்லாவிட்டால் அவர்கள் உங்கள் மீது ஆர்வமாக இல்லை என்று அர்த்தம்.
அடிக்கடி உங்களை தொட்டு பேசுவது ஒரு பெண் உங்கள் மீது ஆர்வமாக இருந்தால் அவர்கள் உங்களை அடிக்கடி தொட்டு பேசுவார். அந்த தொடுதல் சாதாரணமானதாகத்தான் இருக்கும், பாலியல்ரீதியாக இருக்காது. இதனை புரிந்து கொள்ள அவர்களின் முந்தைய நடவடிக்கைகளையும், தற்போதைய நடவடிக்கைகளையும் ஒப்பிட்டு பார்க்க வேண்டும். உங்களை விரும்பத் தொடங்கிய பின்தான் அவர்களிடம் இந்த மாறுதல் இருக்கும்.
கண் தொடர்பு ஒரு பெண் உங்களை விரும்புகிறார் ஆனால் அதைக் காட்டாமல் இருக்க முயல்கிறார் என்பதற்கான தெளிவான அறிகுறிகளில் ஒன்று அவர் உங்களுடன் கண் தொடர்பு கொள்ளும் விதம். ஒரு குறிப்பிட்ட அளவு கண் தொடர்பு என்பது நிலையானது மற்றும் ஒன்றுமில்லாதது. ஆனால் அவர் அடிக்கடி உங்களுடன் கண் தொடர்பு கொண்டாலும் அதனை நீண்ட நேரம் தொடர அனுமதித்தாலும் அவர்கள் உங்கள் மீது ஆர்வம் கொண்டிருக்கிறார் என்று அர்த்தம்.
உங்களை சோஷியல் மீடியாவில் டேக் செய்வது சமூக ஊடகங்களில் உங்களை தொடர்ந்து டேக் செய்தால் அவர்கள் உங்களுடனான தொடர்பை மறைக்க விரும்பவில்லை என்று அர்த்தம். உண்மையில் அவர்கள் உங்களை தொடர்ந்து டேக் செய்வது நவீன காதல் சைகையாகும். இப்படி அவர்கள் உங்களை டேக் செய்வது அவர்கள் உங்களைப் பற்றி நினைக்கிறார்கள் மற்றும் அவர்கள் உன்னை விரும்புகிறார்கள் என்பதற்கான அறிகுறியாக இருக்கலாம். அவர்கள் உங்களை ஒரு நண்பனாக விரும்புகிறாரா, அவருடைய எல்லா நண்பர்களையும் இப்படித்தான் நடத்துகிறாரா என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
உங்களின் அனைத்து ஜோக்குகளுக்கும் சிரிப்பது நீங்கள் வேடிக்கையானவராக இருப்பதால் இதனை நீங்கள் அறிகுறி இல்லை என்று நினைக்கலாம். எல்லோரும் அவர்கள் நினைப்பது போல வேடிக்கையானவராக இல்லாமல் இருக்கலாம்.ஆனால் நீங்கள் எப்போதும் ஜோக்கடித்தாலும் எந்த நகைச்சுவைகள் அவரை சிரிக்க வைக்கின்றன என்பதைக் கவனியுங்கள். நீங்கள் எவ்வளவு மொக்கையான ஜோக்கடித்தாலும் அவர் மட்டும் அதற்கு சிரித்தால் நிச்சயமாக உங்கள் மீது அவர் ஆர்வமாக இருக்கிறார் என்று அர்த்தம்.
உங்கள் அருகில் அமர்வதை எப்போதும் தேர்ந்தெடுப்பது அவர்களுக்கு அமர எங்கு வேண்டுமென்றாலும் இடம் இருக்கலாம் ஆனால் அவர்கள் வேண்டுமென்றே உங்கள் அருகில் அமர்வதை விரும்பி தேர்ந்தெடுத்தால் அது ஒரு வலிமையான அறிகுறியாக இருக்கலாம். குறிப்பாக, அவர்கள் உங்களுடன் எவ்வளவு நெருக்கமாக அமர்ந்தார்?, எப்படி தீண்டினார்? அந்த தீண்டல் எதார்த்தமானதா அல்லது வேண்டுமென்றே செய்யப்பட்டதா? என்பதை கவனியுங்கள். அவர்கள் உங்களை விரும்புவதை வெளிப்படையாகக் காட்ட தைரியம் இல்லை என்பதைத் தீர்மானிக்க இந்தக் கேள்விகள் உங்களுக்கு உதவும். அவர்களின் தோழிகளை நீங்கள் பார்க்க வேண்டுமென்று விரும்புவது அவர்களின் தோழிகளுடன் வெளியே செல்லும்போது உங்களையும் அழைத்தால் அது ஒரு முக்கியமான அறிகுறியாகும்.
உங்கள் மீது அவர்களுக்கு ஆர்வம் இருந்தால், அதனை அவர்கள் தோழிகளுக்கு தெரியப்படுத்துவார்கள். அவர்கள் உங்களைச் சோதனை செய்வதாகத் தோன்றுகிறதா என்பதைக் கவனியுங்கள். அவர்களின் விருப்பத்தை தெரியப்படுத்துவதற்கு முன், அவர்கள் தங்கள் தோழியின் சம்மத்தையும் பெற விரும்புவார்கள். கடந்த காலத்தில் அவர்களுக்கு ஒரு மோசமான உறவுகள் இருந்திருந்தால், அவர்கள் தன் சொந்த தீர்ப்பை இன்னும் நம்பாமல் இருக்கலாம். நீங்கள் ஒரு நல்ல, நேர்மையான நபர் என்பதை உறுதிசெய்ய, அவர்களின் தோழிகளின் உதவியை நாடலாம்.