கத்திரிக்காய் சேர்க்கப்பட்ட உணவுகள், நினைவு சக்தியை அதிகரிக்கிறது. மனதையும் உடலையும் இணக்கமாக வைத்திருக்க உதவுகிறது.
தினசரி வாழ்க்கையில் நாம் பயன்படுத்தும் கத்தரிக்காய் மிகவும் மகத்துவம் வாய்ந்தது. அது காயாக மட்டுமல்ல, வார்த்தைப் பிரயோகத்திலும் முக்கிய இடம் பிடித்துள்ளது. மிகவும் சுலபமாக கிடைக்கும் கத்தரிக்காய், பல்வேறு நிறங்களில் வளர்கிறது. பொதுவாக அடர் நீலத்தில் இருக்கும் கத்தரிக்காயின் நிறம், பல இடங்களில் பர்பிள் எனப்படும் நிறத்திற்கு உதாரணமாக கூறப்படுகிரது. கத்தரிக்காய் உள்ள நீர்ச்சத்து, சருமத்தை மென்மையாக்கும். கத்திரிக்காயில் வைட்டமின் சி, மற்றும் இரும்புச் சத்து உள்ளது.
நரம்புகளுக்கு வலுவூட்டவும், சளி, இருமலைக் குறைக்கவும் uதவும் கத்தரிக்காய், சிறுநீரகக் கற்கள் ஏற்படாமல் இருக்கவும் உதவுகிறது. வாதநோய், ஆஸ்துமா, ஈரல் நோய்கள், கீல்வாதம், சளி, பித்தம், தொண்டைக்கட்டு, மலச்சிக்கல், உடல் பருமன் முதலியவற்றைக் குணப்படுத்தும் பண்பைக் கொண்டது கத்தரிக்காய்.
பிஞ்சுக் கத்தரிக்காயில் உள்ள மருத்துவ பண்புகளுக்கும், முற்றிய கத்திரிக்காய்க்கும் உள்ள ஆரோக்கிய குண நலன்கள் மாறுபடும். முற்றிய கத்தரிக்காய், உடலில் அரிப்பை ஏற்படுத்தும். புற்றுநோய் வராமல் காக்கும் கத்தரிக்காயின் பண்பு, அதன் மிகப் பெரிய மருத்துவ குணமாக பார்க்கப்படுகிறது.
புரதம், கலோரி அளவு, தாது உப்புகள் மட்டுமல்ல, வைட்டமின் ‘பி’ சத்தும் கொண்ட கத்தரிக்காய், இதய நோய்கள் ஏற்படுவதைத் தடுக்கிறது.
உண்ட உணவு, உடனடியாகச் சிதைந்து சத்தாக மாறக் கத்தரிக்காயில் உள்ள வைட்டமின் ‘பி’ பயன்படுகிறது. அதுமட்டுமல்ல, கத்தரிக்காயில் உள்ள மருத்துவ குணமானது, பசி எடுக்காத தன்மையை அகற்றும்.
கத்தரியில் உள்ள வைட்டமின் ‘ஏ’ சத்து, உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதோடு, மனதை அமைதிப்படுத்தும்.
கத்தரிக்காயில் 92% நீர், 6% கார்போஹைட்ரேட், 1% புரதம் மற்றும் மிகக் குறைவான கொழுப்பு உள்ளது. கத்தரிக்காயில் மாங்கனீசு சத்தும் உள்ளது. பருவம், சாகுபடி சூழல் மற்றும் மரபணு வகை ஆகியவற்றின் அடிப்படையில், கத்தரிக்காயின் ஊட்டச்சத்து கலவையில் மாற்றங்கள் காணப்படுகிறது.