அதிக நேரம் உறவில் ஈடுபட்டால் ஆபத்தா?
07 Nov,2022
உறவுக்கு நேரம் காலம் எதுவும் கிடையாது, உங்களுடைய துணைக்கு எவ்வளவு ஈடுபாடு உள்ளதோ அதை பொருத்து உறவு கொள்ளும் நேரத்தை முடிவு செய்யலாம்
நமக்கு பிடித்த விஷயத்தை செய்யும் போது அதில் ஈடுபாடு அதிகரித்து, பல மடங்கு பலன் கிடைக்கும். அப்படித்தான் உடலுறவும். விருப்பம் இல்லாமல் யாராலும் உடலுறவு கொள்ள முடியாது. கலவி என்பது உடலுக்கு மட்டும் அல்லாமல் மனதிற்கும் ஆரோக்கியம் வழங்கக்கூடிய செயல்பாடாகும்.
ஒரு விஷயத்தை நாம் பிடித்து செய்யும்போது நேரம் காலம் பார்ப்பது கிடையாது. அதுபோன்று தான் உடலுறவில் ஈடுபடுவதும். வாழ்க்கையை இனிமையாக்கும் உடலுறவுக்கு நேரம் காலத்தை குறிப்பிட்டு கூற முடியாது. உறவுக்கு நேரம் காலம் எதுவும் கிடையாது, உங்களுடைய துணைக்கு எவ்வளவு ஈடுபாடு உள்ளதோ அதை பொருத்து உறவு கொள்ளும் நேரத்தை முடிவு செய்யலாம். ஒருவேளை ஒருவருக்கு நீண்ட நேர உறவு பிடிக்கும் என்றால், அது குறித்து முன்னரே உங்களுடைய துணையிடம் கூறிவிடுங்கள். அது தொடர்பாக பேசிய பிறகும் உங்கள் துணை நீண்ட நேரம் உடலுறவு கொள்ள நாட்டம் காட்டவில்லை என்றால், உறவை நீட்டிக்க நீங்கள் பல்வேறு வழிகளை மேற்கொள்ள வாய்ப்புள்ளன.
இருவருக்குமான விருப்பங்களை மதிப்பளித்து உறவு கொள்ளும்போது, தம்பதிகளுக்கு இடையே நெருக்கம் அதிகரிக்கிறது. அன்பு கூடுகிறது, அதனால் இல்லரம் சிறக்கிறது. நிச்சயமாக உடலுறவு சார்ந்த விஷயங்களில் தனித்தனி தேர்வுகள் என்பது இருக்கவே செய்யும். அதை ஒருவருக்கு ஒருவர் புரிந்து கொண்டு மதிப்பளித்து நடந்தால், உறவு வலுப்பெறும். நீண்டநேர உறவை விரும்புவோர், பல்வேறு முன்விளையாட்டுக்களில் ஈடுபடலாம். இது பெரும்பாலும் தம்பதிகள் இடையே உள்ள உறவு சிக்கல்களுக்கு தீர்வாக அமைகிறது. ஒரு சிலருக்கு உறவு முடிந்த பிறகு முன் விளையாட்டுக்களில் ஈடுபடுவது அசவுகரியமாக இருக்கும். முடிந்த வரை உறவு கொள்வதற்கு முன்பு முன்விளையாட்டுக்களில் ஈடுபடுவதை வழக்கமாக்கிக் கொண்டால் நல்ல பலனைத் தரும்.
ஆண்களில் சிலருக்கு உறவில் ஈடுபட்ட உடன் ஒரு சில நொடிகளில் விந்து வெளியேறி விடும். ஆனால் அவர்களுக்கு நீண்ட நேரம் உறவில் ஈடுபட வேண்டும் என்கிற எண்ணம் இருக்கும். விந்து முந்தும் பிரச்சினை காரணமாக அது முடியாமல் போகும். மேலும் இது அவர்களுக்கு குற்ற உணர்வையும் தரும். இந்த பிரச்சனையை சரி செய்ய, உறவில் ஈடுபடுவதற்கு முன்பு முன்விளையாட்டுக்களில் ஈடுபடுவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். உங்களுடைய துணை விரும்பும் முன்விளையாட்டுக்களில் தேர்ந்தெடுத்து, நீங்கள் அதை செயல்படும் பட்சத்தில் விந்து முந்துதல் பெரும் பிரச்சினையாக இருக்காது. இதன்மூலம் இருவருமே திருப்தி அடைவீர்கள். உறவும் மகிழ்ச்சியாக நிறைவடையும்.
அதேபோன்று, திருமணம் நடந்த பொழுது உடலுறவில் ஈடுபடுவதற்கு அதிக விருப்பமாக இருக்கும். அதிகபட்சமாக மூன்று மாதங்களுக்குப் பிறகு, கலவி மீதான ஈர்ப்பு குறையத் தொடங்கும். பெண்கள் பலர் குழந்தை பேறுக்கு பிறகு உடலுறவில் முழு விருப்பத்துடன் ஈடுபடுவது குறைவே. அப்போது அவர்கள் அவசர அவசரமாக உணவை முடித்துக்கொள்ள முனைப்பு காட்டுவார்கள். இதை ஆண்கள் முன்னரே உணர்ந்து கொண்டால் நல்லது. குழந்தை பிறந்த பிறகு எப்போதும் போல வாழ்க்கை இருப்பது கிடையாது. அது பெண்களின் உடல் நலனிலும் மன நலனிலும் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்துகிறது. இதன் காரணமாக பெண்கள் பலருக்கு உடலுறவு சார்ந்த விருப்பங்கள் குறைந்துவிடுகின்றன.
உங்களுடன் எனக்கு உடலுறவு கொள்ள விருப்பம் இல்லாதபோது நீங்கள் வற்புறுத்துவது முறை அல்ல. அதே போல வலி ஏற்பட்டு, உறவில் இருந்து விலக நினைத்தாலும் கட்டாயப்படுத்தக்கூடாது. இதை நீங்கள் தொடரும் பட்சத்தில் உங்களுடைய உடலுறவை எதிர்காலங்களில் வெறுக்கும் நிலைக்கு தள்ளப்படலாம். ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு கலவியில் ஈடுபடுவதால் மட்டுமே தாம்பத்தியம் சிறக்கிறது. இருவரின் செயலில் ஒருவருடைய தனிப்பட்ட விருப்பத்துக்கு மதிப்பளித்து, உறவில் ஈடுபடுவது பிரச்சனைக்கு வழிவகுக்கும். நீண்ட நேரம் உறவு கொள்வது தொடர்பாக உங்களுடைய இணைக்கு நல்ல புரிதல் இருந்தால், நீங்கள் மேற்சொன்ன செயல்பாடுகளை தொடங்கலாம்.