துரோகம் செய்வது அவரின் துணைக்கு மனதளவில் பெரிய காயத்தை ஏற்படுத்திவிடும்.
உறவில் ஒருமுறை விரிசல் ஏற்பட்டுவிட்டால் அது நெடுநாள் நீடிக்காது.
துணைக்கு துரோகம் இழைத்தல் என்பது கொடுமையான ஒன்று.
கணவன்-மனைவியோ அல்லது காதலர்களாகவோ எந்தவொரு உறவாக இருந்தாலும் சரி, அந்த உறவில் துரோகம் என்பது இல்லாமல் இருந்தால் தான் அந்த உறவு பலப்படும். ஒரு உறவில் ஒருவர் துரோகம் செய்வது அவரின் துணைக்கு மனதளவில் பெரிய காயத்தை ஏற்படுத்திவிடும், இந்த காயம் எப்போதும் ஆறாத ஒரு வடுவாக இருந்துகொண்டு அவர்களது மனதில் முள்ளாய் குத்தி கிழிக்கும். அதனால் உறவில் உண்மையாய் இருப்பது முக்கியம், உடைந்த கண்ணாடியை ஒட்டவைக்கும்போது அதில் பிம்பம் எப்படி தெளிவாக தெரியாதோ அதேபோல தான் உறவும், உறவில் ஒருமுறை விரிசல் ஏற்பட்டுவிட்டால் அது நெடுநாள் நீடிக்காது. ஒரு உறவில் இருவரும் பரஸ்பரமாக நம்பிக்கையும், அன்பும் கொண்டிருக்க வேண்டும், துணைக்கு துரோகம் இழைத்தல் என்பது கொடுமையான ஒன்று.
ஆரம்பத்திலேயே தமது துணையின் உண்மையான சுயரூபம் தெரிந்துவிட்டால் அந்த வலியிலிருந்து மீண்டு விடுவது எளிதானது, அதுவே நீங்கள் ஆழமாக நம்பிக்கையும், பாசமும் வைத்திருக்கும் உறவில் ஏதேனும் சிறு மாற்றம் நடந்தாலும் அந்த வேதனையிலிருந்து மீண்டெழுவது மிக பெரிய டாஸ்க். திருமணத்திற்கு பிறகு சில கணவன்மார்கள் தங்களது மனைவிக்கு தெரியாமல் வேறு பெண்ணிடம் உறவு வைத்திருக்க்கலாம், இதனை உங்கள் கணவரின் சில நடவடிக்கைகளை வைத்தே நீங்கள் தெரிந்துகொள்ளலாம்.
1) சமீபகாலமாக உங்கள் கணவர் புதிதாக யாரேனும் ஒருவரை பற்றி கூறியிருப்பார், சாதாரணமாக கூறுவது பெரிய விஷயமில்லை, அதுவே அந்த நபரை பற்றியே எப்போதும் அவர் பேசிக்கொண்டிருக்கிறார் அல்லது அவரால் அந்த புதிய நபரை பற்றி பேசாமல் இருக்க முடியவில்லை என்றால் அவர் உங்களுக்கு தெரியாமல் ஏதோ திருட்டுவேலை செய்கிறார் என்று அர்த்தம். புதிய நபர்களுடன் பேசுவது தவறில்லை தான் அதற்காக அவர்களை பற்றியே பேசுவதும், அவர்களுடன் நேரத்தை செல்வழிப்பதும் சந்தேகத்திற்குரியது. சம்மந்தமில்லாதவருக்கு உங்கள் கணவர் முக்கியத்துவம் கொடுத்தால் நீங்கள் கொஞ்சம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
2) வழக்கத்திற்கு மாறாக உங்கள் கணவர் சில காயங்கள் அல்லது கீறல்கள் இருந்தால் அவர் அதை உங்களிடமிருந்து மறைக்க நினைத்தால் நீங்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். ஏனென்றால் அவர் வெளியில் அவருக்கு பிடித்த நபருடன் உங்களுக்கு தெரியாமல் நேரத்தை செலவிட்டிருக்க அதிக வாய்ப்புள்ளது, பிடித்தவருடன் தனிமையில் இருக்கும்போது மூன்றாம் நபரால் வரும் ஏதேனும் பிரச்சனையில் அவர்களுடன் உங்கள் கணவர் கைகலப்பில் ஈடுபட்டிருக்கலாம். அதன் காரணமாக உருவான காயமாக கூட அது இருக்கலாம், அதனால் ஆதாரம் எதுவும் கிடைக்கிறதா என தேட தொடங்குங்கள்.
3) உங்கள் கணவர் உங்களிடம் நெருக்கம் காட்டாமல் உங்களை விட்டு விலக தொடங்குகிறார் என்றால் அவர் அவருடைய உணர்ச்சிகளை வேறொரு இடத்தில தீர்த்து கொள்கிறார் என்பதை நீங்கள் புரிந்துகொள்ளுங்கள். இதனை சரிசெய்ய ஒரே வழி கணவர்தான் நீங்கள் மனம் விட்டு பேசுவது தான், உங்களது திருமண உறவின் நிலை பத்ரியின் உங்களது உணர்ச்சிகளை அவரால் பூர்த்தி செய்ய முடியுமா என்பதை பற்றி தெளிவாக பேசவேண்டியது அவசியம்.
4) சில கணவன்மார்கள் பணிநிமித்தம் காரணமாக அடிக்கடி வெளியூர்களுக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படும், ஆனால் உங்கள் கணவர் உண்மையாகவே வேலை விஷயமாக தான் செல்கிறாரா என்பதை நீங்கள் கண்காணிக்க வேண்டியது அவசியம். பயணம் செய்வதற்கு சில நாட்கள் முன்பாக உங்கள் கணவர் வழக்கத்திற்குமாறாக ஏதேனும் சில உடற்பயிற்சிகளை செய்தாலோ அல்லது தனது அழகை மெருகேற்றும் வேலையில் இறங்கினாலோ அவர் வேறொரு பெண்ணை சந்திக்க செல்கிறார் என்று அர்த்தம், அது அவரது முன்னாள் காதலியாக கூட இருக்கலாம். அதேசமயம் இவை அனைத்திற்கும் தகுந்த ஆதாரங்கள் இருந்தால் மட்டுமே உங்கள் கணவர் உங்களை ஏமாற்றிவிட்டார் என்பதை நிரூபிக்க முடியும்.