தாய்ப்பால் கொடுப்பது தாய்க்கும் குழந்தைக்கும் நன்மை பயக்கும் என்பது அனைவரும் அறிந்த உண்மை. தாய்ப்பால் குழந்தையின் ஊட்டச்சத்து தேவைகளை பூர்த்தி செய்வதற்கு உதவுவது மட்டுமல்லாமல், தாய்க்கும் குழந்தைக்கும் இடையே ஒரு பிணைப்பை உருவாக்குகிறது. எனவே, உலக சுகாதார நிறுவனம் மற்றும் யுனிசெஃப் அமைப்பு குழந்தை பிறந்த முதல் ஒரு மணி நேரத்திற்குள் தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்றும், குழந்தைக்கு முதல் 6 மாதங்களுக்கு பிரத்தியேகமாக தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்றும் பரிந்துரைக்கின்றன – அதாவது தண்ணீர் உட்பட வேறு உணவுகள் அல்லது திரவங்கள் வழங்கப்படக் கூடாது என்று உலக சுகாதார அமைப்பின் இணையதளம் கூறுகிறது.
ஆனால், மற்ற எல்லா விஷயங்களைப் போலவே, மக்களிடையே தாய்ப்பாலைப் பற்றி பல கட்டுக்கதைகள் உள்ளன – தாய்ப்பால் கொடுப்பது முதல் பெரிய மார்பகங்கள் அதிக பால் உற்பத்தி செய்வது வரை பல கட்டுக்கதைகள் உள்ளன. ஆனால், இதில் உண்மை உள்ளதா?
அமிர்தா மருத்துவமனையின் மகப்பேறியல் மற்றும் மகப்பேறு மருத்துவப் பேராசிரியர், துறை தலைவர் டாக்டர் ராதாமணி கே indianexpress.com உடன் பேசினார். அவர் தாய்ப்பாலைப் பற்றிய பல்வேறு கட்டுக்கதைகளை உடைத்தார்.
மார்பகத்தின் அளவு என்பது மார்பகங்களில் இருக்கும் கொழுப்பு திசுக்களின் அளவைப் பொறுத்தது. சிறிய மார்பகங்களைக் கொண்ட பெண்களில் கொழுப்பு திசுக்கள் குறைவாகவும், பெரிய மார்பகங்களைக் கொண்டவர்கள் அதிக கொழுப்பு திசுக்களைக் கொண்டுள்ளனர். மார்பகத்தின் அளவைப் பொருட்படுத்தாமல், அனைத்து பெண்களும் ஆரோக்கியமான தாய்ப்பாலை உற்பத்தி செய்ய முடியும். ஏனெனில், இது சுரப்பி திசுக்களால் உற்பத்தி செய்யப்படுகிறது. கொழுப்பு திசுக்களால் அல்ல என்று டாக்டர் ராதாமணி கூறினார்.
“இருப்பினும், சிறிய மார்பகங்களைக் கொண்ட பெண்கள் மார்பக திசுக்களை வைத்திருக்கக்கூடிய குறைந்த அளவு பால் காரணமாக அடிக்கடி தாய்ப்பால் கொடுக்க வேண்டியிருக்கும்” என்று அவர் டாக்டர் ராதாமணி கூறினார்.
டாக்டர் ராதாமணியின் கருத்துப்படி, தாய்ப்பால் மார்பகத்தின் வடிவத்தையோ அளவையோ பாதிக்காது. கர்ப்ப காலத்தில் இயற்கையான அதிகரிப்பு மற்றும் எடை குறைவதால் மார்பகங்கள் பாதிக்கப்படுகின்றன. இருப்பினும், தாய்ப்பால் கொடுக்கும் போது அவை பெரிதாக இருக்கும். தாய்ப்பால் கொடுத்த பிறகு, மார்பகம் மெதுவாக அளவு குறைகிறது. ஒரு பெண்ணின் மார்பகத்தை ஆதரிக்கும் தசைநார்கள் கர்ப்ப காலத்தில் கனமாக இருப்பதால் பெரிதாகிறது. கர்ப்பத்திற்குப் பிறகு, ஒரு பெண் தாய்ப்பால் கொடுக்காவிட்டாலும், தசைநார்கள் சுருக்கம் அடைவது மார்பகத்தின் தொய்வுக்கு பங்களிக்கும்” என்று அவர் கூறினார்.
“சுமார் 15% மருந்து பொதுவாக தாய்ப்பாலின் மூலம் மாற்றப்படுகிறது, அதில் 1-2% மட்டுமே குழந்தையால் உறிஞ்சப்படுகிறது” என்று அவர் கூறினார். டாக்டர் ராதாமணியின் கருத்துப்படி பாராசிட்டமால், ஆஸ்துமா இன்ஹேலர்கள், வைட்டமின்கள் மற்றும் பெரும்பாலான நுண்ணுயிர் எதிர்ப்பிகள் தாய்ப்பால் கொடுக்கும் போது எடுத்துக்கொள்வது முற்றிலும் பாதுகாப்பானது. இருப்பினும், கோடீன், மூக்கடைப்பு நீக்கிகள், ஆஸ்பிரின், மூலிகை மருந்துகள், புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகள், வாய்வழி ரெட்டினாய்டுகள், அயோடின், அமியோடரோன், ஸ்டேடின்கள், ஆம்பெடமைன்கள், எர்கோடமைன்கள் (ஒற்றைத் தலைவலி எதிர்ப்பு மருந்துகல்) தாய்ப்பால் கொடுக்கும்போது எடுத்துக்கொள்வது தவிர்க்கப்பட வேண்டும்.
பாராசிட்டமால், ஆஸ்துமா இன்ஹேலர்கள், வைட்டமின்கள் மற்றும் பெரும்பாலான நுண்ணுயிர் எதிர்ப்பிகள் தாய்ப்பாலூட்டும் போது எடுத்துக்கொள்வது முற்றிலும் பாதுகாப்பானது என்று அமிர்தா மருத்துவமனையின் மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவப் பிரிவு மருத்துவப் பேராசிரியர், துறைத் தலைவர் டாக்டர் ராதாமணி கே கூறுகிறார்.
“தாய் மருந்தை உட்கொள்வதற்கு சற்று முன்பு குழந்தைக்கு தாய்ப்பால் புகட்டுவதன் மூலம், குழந்தைக்கு கிடைக்கும் மருந்து செறிவு குறைவாக இருக்கும். குறைப்பிரசவம் மற்றும் நோய்வாய்ப்பட்ட குழந்தைகளில் மருந்து நச்சுத்தன்மையின் ஆபத்து அதிகமாக உள்ளது. ஆனால், ஆறு மாதங்களுக்கும் மேலான குழந்தைகளில் அரிதாகவே இருக்கும் என்று அவர் கூறினார்.
தாய்க்கு காய்ச்சல், வைரஸ் காய்ச்சல், வயிற்றுப்போக்கு, வாந்தி, மார்பக அழற்சி போன்றவை ஏற்பட்டால் தாய்ப்பால் கொடுப்பதைத் தொடரலாம் என்று டாக்டர் ராதாமணி கூறினார். மேலும், கூடுதல் நன்மை என்னவென்றால், இது பாதுகாப்பு ஆன்டிபாடிகளை மாற்றும். HIV, T செல் லிம்போட்ரோபிக் வைரஸ் வகை I அல்லது வகை II (HTLV-1/2) போன்ற நிலைகளில், எபோலா வைரஸ் தாய்ப்பால் கொடுப்பது முரணாக உள்ளது. தாயால் தாய்ப்பால் கொடுக்க முடியாத நிலைமைகள் பின்வருமாறு: யூரோசெப்சிஸ், செப்டிசீமியா, நிமோனியா, பிபிஹெச், ஷாக் மற்றும் ஐசியூ கவனிப்பு தேவைப்படுபவை என்று அவர் மேலும் கூறினார்