சர்க்கரை நோயாளிகளே! சாதத்தை இப்படி சாப்பிட்டால் ரொம்ப நல்லதாம்!
09 Oct,2022
தற்போதைய ஆய்வு முடிவுகளின் படி அரிசி மற்றும் உருளைக்கிழங்கு போன்ற அதிக மாவுச்சத்து நிறைந்த உணவுகளை உண்பது சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது என கூறப்படுகிறது. இது மிகவும் ஆச்சரியமானதாக இருந்தாலும், இது முற்றிலும் உண்மை என நிரூபிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய காலகட்டத்தில் மக்களிடையே அதிகம் பேருக்கு இருக்கும் நோய் சர்க்கரை நோய். பொதுவாக அரிசி மற்றும் உருளைக்கிழங்கு போன்ற அதிக மாவுச்சத்து நிறைந்த உணவுப் பொருட்களை சர்க்கரை நோயாளிகள் உண்ணக்கூடாது எனவும், மீறி அதனை சாப்பிட்டால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவானது உயரும் எனவும் பல நாட்களாகவே கூறப்பட்டு வருகிறது. ஆனால் தற்போதைய ஆய்வு முடிவுகளின் படி அரிசி மற்றும் உருளைக்கிழங்கு போன்ற அதிக மாவுச்சத்து நிறைந்த உணவுகளை உண்பது சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது என கூறப்படுகிறது. இது மிகவும் ஆச்சரியமானதாக இருந்தாலும், இது முற்றிலும் உண்மை என நிரூபிக்கப்பட்டுள்ளது.
அரிசி மற்றும் உருளைக்கிழங்கு
அரிசி மற்றும் உருளைக்கிழங்கை எப்படி உண்ண வேண்டுமென்றால், சமைத்த அரிசையை நாள் முழுக்க குளிரூட்டி அதனை மறுநாள் சாப்பிடுவது நல்லது என கூறப்பட்டுள்ளது. சாதத்தை அவ்வாறு குளிரூட்டினால், அது எதிர்ப்பு தன்மை கொண்ட ஸ்டார்ச்சாக மாறும். இதனை நாம் சாப்பிடுவதால் உடலில் உள்ள குளுக்கோஸின் அளவும் கட்டுக்குள் இருப்பதாக கூறப்படுகிறது.
சமைத்து குளிரூட்டப்பட்டு மறுநாள் உண்ணப்படும் சாதம் மற்றும் உருளைக்கிழங்கு போன்ற மாவுசத்து நிறைந்த உணவுப்பொருட்களை சாப்பிடுவது, உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது மற்றும் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது எனவும் மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்த செயல்முறையில் சாதத்தை நாம் உண்ணும்போது, டைப் 1 நீரிழிவு நோயாளிகள் உணவு உண்டபின் ரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவு குறைந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
ஊட்டச்சத்து நிபுணர்களின் கருத்து
இதுகுறித்து, ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகையில், சமைத்த அரிசியை ஒரு நாள் முழுவதும் குளிரூட்டி, அதனை மறுநாள் சாப்பிடுவது சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது என தெரிவித்துள்ளனர். சாதம் குளிர்விக்கப்படும் போது மாவுசத்தானது, ஸ்டார்ச் ரெட்ரோகிரேடேஷன் எனும் நிலையை அடைகிறது. இதன் மூலம் எதிர்ப்பு தன்மை கொண்ட ஸ்டார்ச் உருவாகிறது. 24 மணி நேர குளிர்வூட்டலுக்கு பிறகு, மாவுச்சத்து செரிமானம் அடையக்கூடிய வகையில் மாற்றம் அடைகிறது. இதனால், நீரிழிவு நோயாளிகளுக்கு எந்தவித ஆரோக்கிய குறைபாடும் ஏற்படாது என ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதனை ப்ரீபயாடிக் என அழைக்கின்றனர். இது நமது உடலில் உள்ள ரத்தத்தில் எந்த விதத்திலும் சர்க்கரையின் அளவை அதிகப்படுத்தாது. அதேநேரத்தில் நமது குடலிலுள்ள நுண்ணுயிரிகளுக்கு இது உணவையும் அளிக்கிறது.